Home Tamil Cinema News விக்ரமுடன் ஜோடி சேரும் நயன்தாரா

விக்ரமுடன் ஜோடி சேரும் நயன்தாரா

106

v

முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நயன்தாரா. ‘அரிமா நம்பி’ பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீம் தயாரிக்கும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு முன் 2005ஆம் ஆண்டு ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் நயன்தாரா. தனது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து பல வாய்ப்புகள் நயன்தாரா வீட்டுக்கதவை தட்டின. தன் அழகான தோற்றத்தாலும், மயக்கவைக்கும் நடிப்பாலும் படு வேகமாக தமிழின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார் நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உட்பட பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா இதுவரை கமல் மற்றும் விக்ரமுடன் ஜோடி சேராமல் இருந்தார். ஆனால் தற்போது விக்ரமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்துள்ளது.

விக்ரம், நயன்தாரா கூட்டணி எப்படி இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே நயன்தாரா ரசிகர்களிடம் வந்துவிட்டது. படம் வந்தால் தெரியத்தானே போகிறது.