Home Tamil Cinema News விக்ரம் பிரபுவுடன் இணையும் நிக்கி கல்ராணி!

விக்ரம் பிரபுவுடன் இணையும் நிக்கி கல்ராணி!

136

Actress-Nikki-Galrani

ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லஷ்மணின் உதவியாளர் அசோக் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க விக்ரம் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகியுள்ளார்.

டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நிக்கி கல்ராணி, கோ-2, ஆகிய படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திலும் நடித்து வருகிறார்.

விக்ரம் பிரபு – நிக்கி கல்ராணி இணையும் இந்த புதிய படத்தை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. விக்ரம் பிரபு நடித்த வாகா, வீர சிவாஜி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.