கபாலி பாடல் தலைப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்

கபாலி பாடல் தலைப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்

79

vikram-prabhu

நடிகர் விக்ரம் பிரபு, கபாலி படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ என்ற பாடல் தலைப்பை தனது புதிய படத்தின் தலைப்புக்காக தற்போது கைப்பற்றியுள்ளார். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘நெருப்புடா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராக நடிக்கிறாராம். அதனால், இந்த படத்துக்கு ‘நெருப்புடா’ என்ற தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் அந்த தலைப்புக்கான அனுமதி கேட்டுள்ளனர்.

கலைப்புலி எஸ்.தாணு எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே அந்த தலைப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். இந்த படத்தின் பெயர் அறிமுக விழா இன்று சென்னையில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. படத்தின் அறிமுக விழா மட்டுமில்லாது, விக்ரம் பிரபுவின் ‘பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் வெளியிடப்பட்டது.

 

NO COMMENTS

LEAVE A REPLY