பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் விக்ரம் மகன்!

பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் விக்ரம் மகன்!

177

timthumb

பாரதிராஜா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு காதல் கதையை மையமாக வைத்து புதிய படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ், இயக்குநர் வசந்த் மகன் இருவரையும் ஒருசேர அறிமுகப்படுத்த பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறாராம்.

இதற்காக விக்ரம் மற்றும் வசந்த் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஹீரோக்களை மையமாகக்கொண்ட கதையென்பதால் புதிதாக இரண்டு ஹீரோக்களை அறிமுகம் செய்வது பாரதிராஜாவின் திட்டமாக உள்ளது.  இப்படத்திற்கான நடிக, நடிகையரை தேர்வு செய்தபின் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

முன்னதாக பாரதிராஜா ‘குற்ற பரம்பரை’ படத்திற்கு பூஜை போட்டு விரைவில் படத்தைத் துவங்கப் போவதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது அப்படம் குறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY