Home Tamil Movie Reviews வில்லாதி வில்லன் வீரப்பன் – விமர்சனம்

வில்லாதி வில்லன் வீரப்பன் – விமர்சனம்

542
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

சுமார் 20 வருடங்கள் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பன், கடந்த 2004ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே தமிழில் திரைப்படம் ஒன்று வெளியாகிவிட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு கர்நாடகா எல்லை வனப்பகுதியை கட்டியாண்ட சந்தனகடத்தல், யானை தந்தம் மட்டுமல்லாமல் கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட பலரை கடத்திய, இந்திய அரசுக்கு பெரும் சவாலாக விளங்கிய சர்ச்சைக்கு மனிதரான வீரப்பன் பற்றி சர்ச்சைக்குறிய இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய படம்தான் இந்த வில்லாதி வில்லன் வீரப்பன்.

மொத்தத்தில் "வில்லாதி வில்லன் வீரப்பன்" - தமிழர்களுக்கு வில்லன்.

1.5
இயக்கம்: ராம் கோபால் வர்மா
ஒளிப்பதிவு: அனிகெட்
இசை: ஜீட் கங்கூலி
தயாரிப்பு: ரெய்னா சச்சின் ஜோசி
நடிகர்கள்: சந்தீப் பரத்வாஜ், சச்சின் ஜோசி, உஷா ஜாதவ், லிஸா ரே

சுமார் 20 வருடங்கள் தமிழகம், கர்நாடக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பன், கடந்த 2004ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே தமிழில் திரைப்படம் ஒன்று வெளியாகிவிட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு கர்நாடகா எல்லை வனப்பகுதியை கட்டியாண்ட சந்தனகடத்தல், யானை தந்தம் மட்டுமல்லாமல் கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட பலரை கடத்திய, இந்திய அரசுக்கு பெரும் சவாலாக விளங்கிய சர்ச்சைக்குறி மனிதரான வீரப்பன் பற்றி சர்ச்சைக்குறிய இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய படம்தான் இந்த ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’.

villathi-villan-veerappan

ஏற்கெனவே கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இன்று தமிழில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என விமர்சனத்தில் பார்ப்போம்.

காட்டுக்குள் வீரப்பனை வீழ்த்துவது முடியாத காரியம் என்பதால், அவனை காட்டை விட்டு வெளியே கொண்டுவர வேண்டும், என்ற முயற்சியில் ஈடுபடும் போலீஸ், அதில் வெற்றி பெற்று, அதன் மூலம் வீரப்பனை வீழ்த்துவதிலும் வெற்றி பெறுவது தான் இப்படத்தின் கதை.

இதில் வீரப்பன் எதற்காக காட்டை விட்டு வெளியே வந்தான், அவனை எப்படி வீழ்த்தினார்கள்? என்பதை மையமாக வைத்தே இப்படம் நகர்கிறது, என்ற போதிலும். உண்மையில் வீரப்பன் காட்டை விட்டு வெளியே வந்ததற்கான காரணத்தை மறைத்துவிட்டு, தேவையில்லாத ஒரு காரணத்தை படத்தில் புகுத்தி, தமிழர்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

 

ராம்கோபால் வர்மாவின் கற்பனைப்படி, வீரப்பன் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டதாகவும், அதை பயன்படுத்தி, முகிலன் என்ற விடுதலைப் புலிகள் தலைவர் ஒருவர் மூலம், பிரபாகரனை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறி, வீரப்பனை காட்டை விட்டு வெளியே அழைத்து வந்து, போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கியால் துளைத்துவிட்டார்கள், என்பது தான் இப்படத்தின் கதை.

meet-sandeep-bharadwaj-rgv-s-veerappan_10b2f9bc-9b40-11e5-949b-3f349c5c9a4f

காட்டுக்குள் வீரப்பனை வீழ்த்துவது முடியாத காரியம் என்பதால், அவனை காட்டை விட்டு வெளியே கொண்டுவர வேண்டும், என்ற முயற்சியில் ஈடுபடும் போலீஸ், அதில் வெற்றி பெற்று, அதன் மூலம் வீரப்பனை வீழ்த்துவதிலும் வெற்றி பெறுவது தான் இப்படத்தின் கதை.

 

இதில் வீரப்பன் எதற்காக காட்டை விட்டு வெளியே வந்தான், அவனை எப்படி வீழ்த்தினார்கள்? என்பதை மையமாக வைத்தே இப்படம் நகர்கிறது, என்ற போதிலும். உண்மையில் வீரப்பன் காட்டை விட்டு வெளியே வந்ததற்கான காரணத்தை மறைத்துவிட்டு, தேவையில்லாத ஒரு காரணத்தை படத்தில் புகுத்தி, தமிழர்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

ராம்கோபால் வர்மாவின் கற்பனைப்படி, வீரப்பன் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டதாகவும், அதை பயன்படுத்தி, முகிலன் என்ற விடுதலைப் புலிகள் தலைவர் ஒருவர் மூலம், பிரபாகரனை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறி, வீரப்பனை காட்டை விட்டு வெளியே அழைத்து வந்து, போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கியால் துளைத்துவிட்டார்கள், என்பது தான் இப்படத்தின் கதை.

அதிலும், வீரப்பன் சிறு வயதிலேயே வனத்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்துவிட்டு காட்டில் தலைமறைவாக இருந்ததாகவும், அப்போது அவருடன் விளையாடிய தோழர்களும், அவருடன் சேர்ந்துக்கொண்டு கடத்தலில் ஈடுபட்டதாகவும், இந்த படத்தில் கூறியுள்ள ராம்கோபால் வர்மா, ரஜினிகாந்த், காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட பல முக்கிய பிரமுகர்களை வீரப்பன் கடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

maxresdefault

உண்மையிலேயே வீரப்பன் காட்டை விட்டு வெளியே வந்தது, தனது கண் அறுவை சிகிச்சைக்காக தான், என்று நிஜத்தில் அவனை என்கவுண்டர் செய்த போலீஸ் தரப்பே கூறிய நிலையில், ராம்கோபாலின் இந்த கற்பனை ரொம்ப கண்ட்ராவியாக உள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் இருந்தே வீரப்பனை கொடூரனாக காட்டும் விதத்திலே காட்சிகளை வடிவமைத்துள்ள இயக்குநர் ராம்கோபால் வர்மா, கர்நாடக வனக்காவலர்கள் செய்த அநியாயங்களை சொல்லாமல் தவிர்த்திருப்பதுடன், வீரப்பனால் கொலை செய்யப்பட்ட அதிகாரியின் மனைவி, வீரப்பனை பிடிப்பதற்காக, வீரப்பனின் மனைவிக்கு அடைக்களம் கொடுப்பது போல அமைத்திருக்கும் காட்சிகள் திரைக்கதையின் மிகப்பெரிய சறுக்கல்.

அதிலும் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள லிஷா ராய், நடிப்பதற்கு பதிலாக அடிக்கடி தனது உதட்டை பிதுக்கி பிதுக்கி காட்டுவது, தனது கணவனின் கொலைக்கு பழி தீர்ப்பதற்கு பதிலாக, வேறு எதற்கோ தயாராக இருப்பது போல இருக்கிறது.

வீரப்பன் வேடத்தில் நடித்துள்ள சந்தீப் பரத்வாஜ், படத்தின் நாயகன் வீரப்பன் என்பதையே மறந்து, வில்லனாகவே நடித்துள்ளார். வீரப்பனின் மனைவியாக நடித்துள்ள உஷா ஜதாவின் கதாபாத்திரமும் எடுபடவில்லை.

veer-9

வீரப்பனை ஏதோ தெலுங்கு மசாலா பட வில்லனை போல் காட்டியுள்ளார் இயக்குனர். அதேபோல் இரு தரப்பினர் செய்த விஷயங்களையும் முழுமையாக காட்டவில்லையோ என தோன்றுகிறது. ஒட்டு மொத்த படமும் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. படம் நேரடியான தமிழ் படமாக இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் மனதில் ஒட்டியிருக்குமோ என்னவோ. ஏதோ ஹிந்தி டப்பிங் சீரியல் பார்த்ததை போல் ஒரு உணர்வு தருகிறது.

வீரப்பன் யோக்கியவன் அல்ல, அவன் தண்டிக்கப்பட வேண்டிய கொலைக்காரன் தான், அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், அவனைப் பற்றிய உண்மைகளை முழுமையாக இல்லை என்றாலும், குறைந்தது, பொய்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலாவது சொல்லியிருந்தால், ராம்கோபால் வர்மாவின் படத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

அதை செய்யாமல், ட்விட்டரில் தனது போக்கிற்கு ஆபாச கருத்துக்களை அவிழ்த்துவிடுவது போல, உண்மை சம்பவத்தில் தனது கேவலமான கற்பனையை திணித்திருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

வீரப்பன் போலீஸிடம் இருந்து தப்பித்துச் செல்லும் போது, அருவி ஒன்றின் மீது ஏறி தப்பிச் செல்லும் காட்சியில் மட்டும் நமது புருவத்தை உயர்த்தச் செய்கிறது படத்தின் ஒளிப்பதிவு. மற்றபடி தொழில்நூட்ப ரீதியாக படத்தில் சொல்லும்படியாக இல்லை. இசையும் இரைச்சலாகவே உள்ளது.

மொத்தத்தில் “வில்லாதி வில்லன் வீரப்பன்” –  தமிழர்களுக்கு வில்லன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here