Home Tamil Cinema News இரவு விருந்தில் கலந்து கொண்ட விராட் கோலி – அனுஷ்கா சர்மா

இரவு விருந்தில் கலந்து கொண்ட விராட் கோலி – அனுஷ்கா சர்மா

131

virat-anushka

காதல் ஜோடியான விராட் கோலி -அனுஷ்கா சர்மா கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது மீண்டும் ஒன்றாக சுற்ற தொடங்கிவிட்டனர். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இருப்பினும் அனுஷ்கா சர்மா கிரிக்கெட் போட்டியில் கோலியின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்.

அதேபோல் கோஹலியும் உடைந்த போன காதலை மீண்டும் ஒட்ட வைக்க அனுஷ்காவின் சகோதரர் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். காதலி அனுஷ்கா சர்மாவை சமூகவலைதளங்களில் கேலி செய்தவர்களை விளாசித் தள்ளினார் விராட் கோலி.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி மீண்டும் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். பிறகு அனுஷ்கா சர்மாவும், கோலியும் இரவு ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here