Home Tamil Movie Reviews விசாரணை – விமர்சனம்

விசாரணை – விமர்சனம்

860
TheNeoTV Tamil Movie Rating
  • Over Rating

Summary

போலீஸின் வரம்பு மீறிய அதிகரத்தையும், சாதாரண மனிதர்கள் மீதான அவர்களது இரக்கமற்ற தாக்குதலை பற்றியும் "விசாரணை" படம் மூலம் தொலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாரன். அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில் சிக்கி அநியாயமாக செத்துப் போகும் மூன்று சாமானிய கூலிகளின் வலியினை அப்படியே மனசுக்குள் நெருடல் ஏற்படும் வகையில் விசாரணை படம் காட்டியிருக்கின்றது.

மொத்தத்தில் வெற்றி மாறனின் விசாரணை – போலீசுக்கான சவுக்கடி

4.0
இயக்கம்: வெற்றிமாறன்
ஒளிப்பதிவு: எஸ்.ராமலிங்கத்தின்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு: வெற்றிமாறன், தனுஷ்
நடிகர்கள்: அட்டகத்திதினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, ஆடுகளம் முருகதாஸ்

போலீஸின் வரம்பு மீறிய அதிகரத்தையும், சாதாரண மனிதர்கள் மீதான அவர்களது இரக்கமற்ற தாக்குதலை பற்றியும் “விசாரணை” படம் மூலம் தொலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாரன். அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில் சிக்கி அநியாயமாக செத்துப் போகும் மூன்று சாமானிய கூலிகளின் வலியினை அப்படியே மனசுக்குள் நெருடல் ஏற்படும் வகையில் விசாரணை படம் காட்டியிருக்கின்றது.

21-1442839529-visaranaivijay

போலீஸ்காரர்கள் சகவாசம் பொல்லாப்பையே தேடித் தரும் எனும் வழக்கு சொல்லை உண்மையாக்கி, வெற்றிமாறன் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் உண்மை சம்பவத்தின் தொகுப்பே விசாரணை மொத்தத் திரைப்படம்.

ஆந்திரவின் குண்டூரில் உள்ள ஒரு பூங்காவில் காசு சிக்கனத்திற்காக தங்கிக்கொண்டு ஆளுக்கொரு பிழைப்பு பார்த்து வயிற்றை கழுவு பவர்கள் அட்டக் கத்தி தினேஷ் உள்ளிட்ட நான்கு தமிழ் இளைஞர்கள்.

Visaranai f

கேட்க நாதியில்லாத நால்வரையும் ஒரு பெரும்திருட்டு வழக்கில் சிக்க வைத்து, அடித்து உதைத்து, மேலிட பிரஸரால் கேஸை முடிக்க நினைக்கிறார் அந்த ஊர் அடாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர். வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. நால்வரும் தாங்கள் குற்றமற்றவர்கள். என தமிழில் சொல்வது புரியாது குழம்பும் நீதிபதி, அது சமயம் வேறு ஒரு வழக்கு விஷயமாக குண்டூர் வரும் தமிழக போலீஸ் அதிகாரி சமுத்திரகனியின் உதவியை நாடுகிறார்.

அந்த நால்வரும் குற்றமற்றவர்கள். எனும் உண்மையை கோர்ட்டுக்கு சொல்லி, நால்வரையும் தன்னுடன் தமிழகம் அழைத்து வருகிறார் சமுத்திரகனி. வந்த இடத்தில் அந்த நால்வரில் ஒருத்தர் வழியிலேயே இறங்கிக் கொள்ள, மீதி மூவரும் தமிழக போலீஸாரின் சுயலாபத்திற்காக தேடிக் கொள்ளும் கொடூர முடிவு தான் விசாரணை படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்பு மான மீதிக் கதை.

visaranai

ஆந்திர போலீஸிடம் சிக்கி அடி உதை சித்ரவதைகளுக்கு உள்ளானாலும் உண்மை பேசும் அப்பாவி இளைஞராக அட்டகத்தி தினேஷ் – சபாஷ். அவரது நண்பர்களாக வரும் முருகதாஸ் உள்ளிட்டோரும் அருமை. ஆனாலும் தமிழக போலீஸின் சுய நலத்தால் அவர்களுக்கு ஏற்படும் முடிவு கொடூரம்.

மிடுக்கான தமிழக போலீஸ் ஆய்வாளராக சமுத்திரகனி, இன்னமும் துளியோண்டு நம்மூர் போலீஸில் எஞ்சியிருக்கும் மனிதநேயத்தை காட்டும் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்.

அடி, உதை என படம் போகும் போது கயல் ஆனந்தி இடையில் வந்து கொஞ்சம் இதம் தருகிறார். ஆனந்தி வந்து போகும் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.

04-1454569984-visaranai546

ஆடிட்டராக வரும் கிஷோர், அரக்கத்தனமான ஆந்திர போலீஸ் இன்ஸா’க வந்து மிரட்டும் அஜெய்கோஷ், சரவண சுப்பையா, சேரன்ராஜ், ஈ.ராமதாஸ் உள்ளிட்ட எல்லோரும் மிரட்டும் நடிப்பை தந்துள்ளனர்.

போலீஸில் ஆந்திர போலீஸ், தமிழ்நாடு போலீஸ்.. என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவர்களுக்கு கேஸை முடிக்க வேண்டுமென்றால் எத்தனை அப்பாவிகளையும் கொன்று குவிக்கவோ, சென்று விடு… சிறைக்கு என அனுப்பவோ, தயங்காத அடப்பாவிகள் தான் போலீஸில் பலரும். என துணிச்சலாக தோலுரித்து காட்டியிருப்பதற்காக இயக்குனர் வெற்றிமாறனை பாராட்ட வேண்டும்.

Visaranai-2015

ஒரு பக்கம் அப்பாவிகளை அடித்து உதைக்கும் போலீஸ், தேவைபட்டால், பதவியில் இருப்பவர்களுக்காக, சமூகத்தில் அந்தஸ்த்தில் உள்ளவர்களையும் தூக்கி போட்டு மிதிக்கும். என்பதையும் ஆடிட்டராக வரும் கிஷோர் கேரக்டரின் மூலம் காட்டி போலீஸூக்கு அரசாங்கத்தாரால் தரப்பட்டிருக்கும் வரம்பு மீறிய அதிகாரத்தை சுட்டி காட்டி, அது குறைக்கப்பட வேண்டும்.

எஸ்.ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் அந்த ஆந்திரலாக் – அப் கொடூரங்களையும் தமிழக போலீஸின் என்கவுண்ட்டரையும் நாமும் நேரில் பார்த்தது போன்ற பிரம்மையை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வெற்றி மாறன்.

மொத்தத்தில் வெற்றி மாறனின் விசாரணை’ – போலீசுக்கான சவுக்கடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here