Home Tamil Cinema News லிங்குசாமி மீது நடிகர் விஷால் புகார்

லிங்குசாமி மீது நடிகர் விஷால் புகார்

136

sandakozhi2

நடிகர் விஷால் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், ‘சண்டக்கோழி’. லிங்குசாமி இயக்கி இருந்தார். இதில் மீராஜாஸ்மின் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. லிங்குசாமியே இதையும் டைரக்டு செய்வதாக இருந்தது. விஷால் இதில் கதாநாயகனாக நடிப்பதுடன், தயாரிக்கவும் முன் வந்தார்.

தற்போது விஷால் ‘மருது’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு ராஜபாளையம் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் முடிவடைந்ததும் சண்டக்கோழி-2, படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் லிங்குசாமி திடீரென்று அல்லு அர்ஜுனை வைத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தை இயக்க போய்விட்டார். அந்த படத்தை முடித்து விட்டு ‘சண்டக்கோழி-2’ படத்தை இயக்குவதாக தெரிவித்தாராம். இதனை விஷால் ஏற்கவில்லை. சண்டக்கோழி படத்தை நிறுத்துவதாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.

இதுகுறித்து விஷால் கூறும்போது, ‘சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணிமீது கவனம் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், டைரக்டர்கள் படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்துவது நல்லது. சண்டக்கோழி-2 படம் கைவிடப்படுகிறது’ என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், லிங்குசாமி மீது புகார் கூறியதுடன் தான் கொடுத்த சம்பள முன்பணத்தை அவர் திருப்பித்தர வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here