ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்து தொடர்பாக நடிகர் விஷால் விளக்கம்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்து தொடர்பாக நடிகர் விஷால் விளக்கம்

80

vishal

ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக நடிகர் விஷால் கருத்து தெரிவித்ததாக கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைய நீக்க கோரி போராடி வரும் அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன.

குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் கருத்து தெரிவித்ததாக தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் சூடாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த பிரச்சனை பற்றி விஷால் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

அதில், “நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல. இந்த விளையாட்டு பற்றிய வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இது குறித்துப் பேசுவது சரியாக இருக்காது” என்று விஷால் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY