Home Tamil Cinema News ‘விஷாலின்’ கதகளியை அடுத்த அதிரடி ஆரம்பம்

‘விஷாலின்’ கதகளியை அடுத்த அதிரடி ஆரம்பம்

210

vishal

விஷால் தற்போது ‘கதகளி’ படத்தில் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்து வருகிறார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொங்கல் அன்று இப்படம் வெளியாகும் என்று விஷாலின் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஷாலின் அடுத்த படமான ‘மருது’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கார்த்தி நடித்து ஹிட் கொடுத்த ‘கொம்பன்’ பட இயக்குனர் முத்தையா இயக்கும் இந்த படத்தின் கதை கிராமத்து பின்னணியை கொண்ட காதல் மற்றும் ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க இருக்கிறார். மேலும் ராதாரவியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.