Home Tamil Cinema News லிங்குசாமியுடன் மீண்டும் இணையும் விஷால்

லிங்குசாமியுடன் மீண்டும் இணையும் விஷால்

96

6

விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. இதன் அடுத்த பாகமான சண்டக்கோழி 2 வது பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சண்டக்கோழி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 வது பாகத்தை எடுக்க விஷால், லிங்குசாமி இருவரும் ஆர்வம் காட்டி வந்தனர். தற்போது அதற்கான செயல் திட்டத்தினை இருவரும் உருவாக்க துவங்கிவிட்டனர்.

இதன் காரணமாக வருகின்ற மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும், மீரா ஜாஸ்மினும் 2 வது பாகத்தில் முக்கியமான வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகின்றது.

கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. யுவனுக்குப் பதில், இந்த பாகத்தில் இமானை இயக்குநர் லிங்குசாமி ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

இதில் சத்யராஜ் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் ஆனால் அது வில்லன் வேடம் தானா என்பது குறித்து தகவல்கள் ஏதும் இல்லை. கஞ்சா கருப்பிற்குப் பதில் சதீஷ் காமெடியனாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here