Home Tamil Cinema News தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இனி கடன் இல்லை – விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இனி கடன் இல்லை – விஷால்

107

vishal

நடிகர் சங்க பழைய நிர்வாகிகள் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை எஸ்பிஐ சினிமாஸிடம் ஒப்படைத்து, அதன் மூலம் நடிகர் சங்க கடனை அடைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. சமீபத்தில் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளாகப் பொறுப்பேற்ற நாசார், விஷா ல், கார்த்தி உள்ளிட்டோர் எஸ்.பி.ஐ.சினிமாஸுடன் பேசி, பல்வேறு நபர்களிடம் கடன் பெற்று நடிகர் சங்க நிலத்தை மீட்டனர்.

கடன் தொகையை திருப்பி அளிக்கும் வகையிலும், நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதற்காகவும் நிதி திரட்டும் வகையில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நட்சத்திர கிரிக்கெட் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு கடனை திருப்பி செலுத்திவிட்டதாக நடிகர் விஷால் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, ஐசரியிடம் கடனாக வாங்கிய ரூ. 2 கோடி திரும்ப அளித்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்கட்ட தொகையாக ரூ. 9 லட்சம் கொடுக்க முன்வந்த அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் சங்கம் கடனிலிருந்து மீண்டு விட்டது. நடிகர் சங்க வரலாற்றிலேயே முதல் முறையாக, சங்க நிலம் கைக்கு வந்துவிட்டது மட்டுமில்லாமல், ரூ. 8 கோடி அறக்கட்டளை கணக்கில் இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.