Home Tamil Cinema News ‘விஷால்’ நடிக்கும் மருது படப்பிடிப்பு துவங்கியது

‘விஷால்’ நடிக்கும் மருது படப்பிடிப்பு துவங்கியது

135

Marudhu

விஷால் நடிக்கும் ‘மருது‘ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவெ கொம்பன் படத்தை இயக்கியவர் ஆவார். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கின்றார்.

இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த ‘கதகளி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முடிவுற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கும் ‘மருது’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் விஷால். தற்போது அதன் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஷாலுடன் ராதாரவி, சூரி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. விஷாலின் ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைந்த மண்வாசனை மனக்கும் படமாக மருது இருக்கும் என நம்பலாம்.