Home Tamil Cinema News வெள்ள நிவாரண பணிகளில் உதவிகரம் நீட்டிய வித்யூலேகா

வெள்ள நிவாரண பணிகளில் உதவிகரம் நீட்டிய வித்யூலேகா

109

vithyaleka

நடிகை வித்யூலேகா ராமனும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி, உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தமிழகத்தை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் பாதிப்பில் பல்வேறு பகுதிகள் நாசக்காடாக மாற்றியுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் உணவு, உறைவிடம் மட்டுமில்லாது அத்தியாவசிய பொருட்கள் எதுவுமின்றி பெரிதும் தவித்தனர். அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக கடந்த 3 நாட்களாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும், நடிகர், நடிகைகளும் பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் நகைச்சுவை நடிகை வித்யூலேகா ராமனும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி, உதவிக்கரம் நீட்டியுள்ளார். வித்யூலேகா ராமன் பூமிகா டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிவாரண உதவிகளை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,

சென்னைக்கும், தமிழ்நாட்டுக்கு இது மிகவும் மோசமான நேரம். ஆனாலும், நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்யவேண்டும். இந்த உலகத்தில் அதைவிட மிகப்பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது. நான் பூமிகா டிரஸ்ட்டுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ததை பெருமையாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் முடியாத நிலையிலும், வித்யூலேகா போன்ற நல்ல உள்ளங்களும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மக்களுக்கு கடினாமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் உதவிக்கரம் நீட்டுவது பாராட்டுக்குரிய விடயம்தான்.