Home Tamil Cinema News ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘விவேகம்’ இசை வெளியீடு

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘விவேகம்’ இசை வெளியீடு

114

அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் அனைத்து பாடல்களின் டிராக் லிஸ்டும் வெளியிடப்பட்டுள்ளது.

விவேகம் படத்தில் இருக்கும் பாடல்களின் விவரம்:

1. ‘நெவர் எவர் கீப் அப்’ – ‘விவேகம்’ டீஸரில் அஜித் பேசும் பஞ்ச வசனத்தோடு இப் பாடல் அமைந்துள்ளது. பாடலை அனிருத் பாடியுள்ளார்.

2. ‘காதலாட’ – கபிலன் வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் சிங்கள் டிராக்காக ஏற்கனவே வெளியிடப்பட்டது. பாடலை அனிருத், சாஷா திருப்பதி ஆகியோர் பாடியுள்ளனர். அஜித், காஜல் அகர்வால் ஆகியோருக்கு இடையேயான டூயட் பாடலாக அமைந்துள்ளது.

3. ‘வெளியேற’ – இந்தப் பாடலை பாடகி மானசி பாடியுள்ளார்.

4. ‘காதலாட’ – இரண்டாவது முறையாக இடம்பெற்று இருக்கும் இந்தப் பாடலை பிரதீப் குமார் மற்றும் சாஷா திருப்பதி பாடியுள்ளனர். இப் பாடல் புதிய மெட்டில் உருவாகியுள்ளதா என்பது பாடல் வெளியான பின்புதான் தெரியவரும்.

5. ‘தலைவிடுதலை’ – சிங்கிள் டிராக்காக வெளியாகி எல்லோராலும் கவரப்பட்டு அதிகமாக ஷேர் செய்யப்பட்ட பாடல். பாடல் அனிருத் மற்றும் ஹரிஷ் சுவாமிநாதன் ஆகியோர் பாடியுள்ளனர்.

6. ‘சர்வைவா’ – இதுவும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடலாக அமைந்துள்ளது. அனிருத், யோகி பி ஆகியோர் பாடியுள்ள இந்தப் பாடல் திரையரங்குகளில் நிச்சயம் தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. விவேகம் தீம் மியூசிக் – படத்தில் அஜித் செய்யும் சாகசங்களை மையப்படுத்தி இந்த தீம் மியூசிக் போடப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here