எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட சுற்றுச்சூழல் அமைப்பு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது

எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட சுற்றுச்சூழல் அமைப்பு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது

21

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் கடந்த 27ம் தேதி கப்பல்கள் இரண்டு மோதிக் கொண்ட விபத்தில் கப்பலில் கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை கடலோரப் பகுதிகலில் பரவி மாசடைந்துள்ளன. எண்ணெய் பரவிய பகுதிகளில் அரசு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

மேலும், அந்தந்த பகுதி மீனவர்கள் தாமாக முன்வந்து கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று, சென்னையில் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் துறையில் வேலை பார்ப்போர் என அனைவரையும் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட அழைப்பு விடுத்திதுள்ளது.

இந்த அழைப்பில் கடலில் பரவி வரும் எண்ணெய்யை அகற்ற அரசுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களாக வருமாறு கூறப்பட்டுள்ளது. விருப்பம் இருப்பவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அடுத்த 3 நாட்கள் வேலை செய்யக் கூடிய வகையில் தயாராக வருமாறும், அப்படி வருபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளம் மூலம் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை பார்த்து எண்ணெய்யை அகற்றும் பணியை செய்ய விரும்புவோர் 9677097824 என்ற எண்ணை தொடர்பு கெள்ளவும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

 

NO COMMENTS

LEAVE A REPLY