Home Tamil Cinema News பூஜா, பார்வதி மேனன் பற்றி வலைதளத்தில் ஆபாச வர்ணனை

பூஜா, பார்வதி மேனன் பற்றி வலைதளத்தில் ஆபாச வர்ணனை

254
pooja

நடிகை ‘பார்வதி மேனனை’ ஒரு ரசிகர் ஆபாசமக வர்ணித்தார் அதற்கு அவர் நீ ஒரு ஒழுக்கக் கேடான மனிதனாக இருப்பதற்கு வருத்தப்படுகிறேன். நீ நல்லவனாக நடக்க கற்றுக்கொள். இல்லையெனில் இந்த உலகம் உனக்கு கற்றுக்கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் நடிகை ‘பூஜாவையும்’ ஒரு ரசிகர் ஆபாசமாக வர்ணித்தார். பூஜா நடிகர் மாதவனுடன் ஜே ஜே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். நான் கடவுள் திரைப்படத்தில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அவரின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு ரசிகர் நீங்கள் பிங்க் நிற ஆடையில் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கூறினார். மேலும் அவரது உடல் அழகு பற்றி ஆபாசமாக வர்ணித்தார்.

இதனால் கோபமடைந்த பூஜா அந்த ரசிகரை வெளுத்து வாங்கிவிட்டார்.  “இப்படி என்னை ஆபாசமாக வர்ணிக்கும் உன்னை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். நாட்டில் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து விட்டன. பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை தொலைகாட்சி, பத்திரிக்கைகள் மூலம் பார்க்கிறோம். அது மாதிரியான ஒரு கற்பழிப்பு குற்றவாளியாக  நீயும் மாறிவிடக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.

நீ உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். நீ திருந்துவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. உன்னை ஒரு பெண்தான்  பெற்றிருக்கிறாள். உனக்கு ஒரு சகோதரி இருக்கலாம். அவளும் ஒரு பெண்தான். உனக்கு பெண் நண்பர்களும் இருக்கலாம். அவர்கள் உன்னை மதிப்பது போல் நடந்து கொள். நீ திருமணம் ஆனவனாக இருக்கலாம். அல்லது திருமணம் நடக்க இருக்கலாம்.

உன் மனைவி உன்னை மதிப்பது போல் நடந்து கொள். உனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கலாம். அப்படி பிறக்கும் போது, இந்த உலகில் உள்ள ஆபத்தான ஓநாய்கள்களிடமிருந்தும், வக்கிர புத்தி கொண்டவர்களிடமிருந்தும் உன் மகளை காப்பற்ற நீ போராட வேண்டியிருக்கும். இதையெல்லாம் யோசித்து நீ நல்லவனாக நடந்து கொள்” என்று அறிவுரை வழங்கினார்.