Home Astrology Weekly Rasi Palan வார ராசிபலன் – 11–12–2015 முதல் 17–12–2015 வரை

வார ராசிபலன் – 11–12–2015 முதல் 17–12–2015 வரை

555

mesahamமேசம்: குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் இருந்தாலும், சீராக நடைபெற்று வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பெண்கள் சகோதரர் வழி உறவினர் வீட்டுக்குச் செல்ல நேரிடும். கலைஞர்கள் பணிகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பணவரவு அதிகமாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், பிறகு செய்யலாம் என்று தள்ளி வைத்த வேலையை, உடனே செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, பழைய வாடிக்கையாளர் மூலமாக புதிய நபரின் அறிமுகமும், தொழில் ரீதியான முன்னேற்றமும் காணப்படும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள், வியாபார அபிவிருத்திக்காக கூட்டாளிகளுடன் ஆலோசிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும்.

சந்திராஷ்டமம்: வெள்ளிக்கிழமை

பரிகாரம்: சக்கரத்தாழ்வாருக்கு புதன்கிழமை துளசி மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி


rishabamரிஷபம்: குடும்பத்து அங்கத்தினர்கள், உங்கள் யோசனைக்கு ஆதரவு அளித்து ஒத்துழைப்புத் தருவார்கள். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். செலவினங்கள் சற்று அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புண்டு. கலைஞர்கள், பணிகளில் உற்சாகமான அனுபவங்களைப் பெறுவார்கள். புதிய வாய்ப்பும், அதனால் பணவரவுகளும், புகழும் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகலாம். கவனமாகப் பணிகளில் ஈடுபடாவிட்டால், தவறுகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் பார்வைக்கு இலக்காக நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வேலைப்பளு காரணமாக ஓய்வின்றி பணியாற்றுவார்கள். தொழில் ரீதியான செலவுகள் கூடும். கூட்டுத் தொழிலில் சுமாரான லாபம் காணப்படும்.

சந்திராஷ்டமம்: சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை காலை 9 மணி வரை

பரிகாரம்: அம்மனுக்கு திங்கட்கிழமை அன்று முல்லை மலர் மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2,5,6
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்டக்கிழமை: திங்கள்


mithunamமிதுனம்: குடும்பம் சுமாராக நடைபெற்று வரும். ஆலய தரிசனம் செய்யத் திட்டம் தீட்டுவீர்கள். கடன் சுமை இருந்தாலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. கலைஞர்கள் கைவசம் உள்ள பணிகளில் அதிக கவனம் செலுத்தி, அதன் மூலம் எதிர்பார்க்கும் வருமானத்தை அடைவார்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், பதிவேடுகளை கையாள்வதிலும், கொடுக்கப்பட்ட பொறுப்புகளிலும் கவனமாக இல்லாவிட்டால் தொல்லைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், ஏற்கனவே செய்து கொடுத்த பணியில் உள்ள குறைகளை சீர்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம். பணிகள் காரணமாக ஓய்வு நேரம் குறையும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் சுமாரான வியாபாரம் காணப்பட்டாலும், வழக்கமான லாபம் இருக்கும்.

சந்திராஷ்டமம்: திங்கள் காலை 9 மணி முதல் செவ்வாய் மற்றும் புதன்கிழமை பகல் 1.30 மணி வரை

பரிகாரம்: சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் வெற்றியான வாழ்க்கையும், செல்வமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 1,5,6
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: புதன்


kadakamகடகம்: குடும்பத்தில் செலவுகள் அதிகமிருந்தாலும், அதற்கேற்ற வருமானமும் ஏற்படும். பெண்களுக்கு உடல் நலக்குறைவால் செலவுகளைச் சந்திக்க நேரலாம். கலைஞர்கள், சகக்கலைஞர் இல்லத்து சுபநிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து கொண்டு பரிசளித்து மகிழலாம். புதிய வாய்ப்புகள் மூலம் பண வரவுகள் அதிகமாகலாம்.

உத்தியோகத்தில் தொல்லைகள் இருந்தாலும், அவைகளைப் பொறுத்துக் கொண்டு முக்கிய வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், உதவியாளர்கள் செய்த தவறுகளை ஏற்று, அந்தப் பணியில் உள்ள குறைகளை சரி செய்து கொடுப்பீர்கள். கூட்டுத்தொழிலில் திட்டமிட்ட வேலையொன்றை தைரியத்துடன் ஏற்று, குறித்த நேரத்தில் செய்து கொடுத்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் நன்றாக நடைபெற்று எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: புதன் பகல் 1.30 மணி முதல் வியாழக்கிழமை வரை

பரிகாரம்: லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை சூட்டி நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நலன்களும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி


simamசிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மங்கல நிகழ்ச்சிகள் செய்யத் திட்டமிடுவீர்கள். சகோதரி வழி உறவுகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு புதிய அணிமணிகள் அடையக்கூடும். கலைஞர்கள், சகக் கலைஞர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். பெரிய நிறுவனத்திலிருந்து புதிய ஒப்பந்தம் வரக்கூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மங்கல நிகழ்ச்சிகள் செய்யத் திட்டமிடுவீர்கள். சகோதரி வழி உறவுகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு புதிய அணிமணிகள் அடையக்கூடும். கலைஞர்கள், சகக் கலைஞர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். பெரிய நிறுவனத்திலிருந்து புதிய ஒப்பந்தம் வரக்கூடும்.

பரிகாரம்: சுக்ர பகவானுக்கு வெள்ளிக்கிழமை சிவப்பு மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வலம் வந்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல நன்மையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 6,7,9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி


kanniகன்னி: குடும்பத்தில், தேவையான பொருளை வாங்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு அலைய நேரலாம். பெண்களின் சேமிப்பிலிருந்து முக்கிய செலவைச் செய்ய நேரிடலாம். கலைஞர்கள், குடும்பத்திற்காக சில செலவுகளைச் செய்வதில் மகிழ்வடைவீர்கள். பலர் பங்கேற்கும் விருது, பாராட்டுப் பெறும் நிகழ்ச்சிகளில் நீங்களும் பங்கு பெறலாம்.

உத்தியோகத்தில் வழக்கமான வேலையைச் செய்ய முடியாமல், புதிய வேலைகளைச் செய்ய நேரிடலாம். ஒரு சிறிய வேலைக்காக அதிக அளவில் சிரமப்பட வேண்டியிருக்கும். சொந்தத்தொழிலில், வருமானம் குறைவாக இருந்தாலும், வேலைகள் அதிகமாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் விருப்பப்படி சில மாற்றங்களைச் செய்யும்படி இருக்கும். வியாபாரத்தை தற்போது விரிவாக்கம் செய்வதால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.

பரிகாரம்: அங்காரக பகவானுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு மலர் சூட்டி, நெய்தீபமிட்டு வலம் வந்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல நலன்களும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: செவ்வாய்


thulamதுலாம்: குடும்பத்தில், பிள்ளைகளின் சுபநிகழ்ச்சிகளை நடத்த மேற்கொண்ட முயற்சிகள் முன்னேற்றமான பாதையில் செல்லும். கலைஞர்கள் தொழில் ரீதியான முன்னேற்றம் காணுவார்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். சகக்கலைஞர்களின் குடும்ப விழாவுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சிலருக்கு, பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். செலவுகள் கட்டுப்படும். வரவுகள் அதிகரிக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் விரைவில் முடிந்து விடும் என நினைத்த காரியம் ஒன்றில் முடிவில் சிக்கல் ஏற்படலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தொழில் ரீதியாக முக்கிய பிரமுகர் ஒருவரைச் சந்திக்க நேரலாம். நிதி நிறுவனங்களில் கடனுதவி பெறும் முயற்சி வெற்றி பெறும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை வில்வ மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 3,5,9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை: வியாழன்


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில், பெண்கள் வழியில் சிறு மன வேறுபாடுகளைச் சந்திக்க நேரலாம். கடன் தொல்லை மனதுக்கு ஆயாசம் ஏற்படுத்தலாம். கலைஞர்கள், பழைய வாய்ப்புகளில் கவனம் செலுத்துவார்கள். புதிய வாய்ப்பை விட அதிக வருமானம் இதில் கிடைக்கலாம். சகக்கலைஞர் மூலம் பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்களைப் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள், தள்ளிவைத்த வேலையொன்றை உடனே செய்யும் நிலை ஏற்படலாம். வெளியில் செல்லும் போது எதிர்பாராமல் முக்கிய நண்பரை சந்திப்பீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், தொழிலில் கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் வசூலாகி மகிழ்ச்சி தரும். கூட்டுத்தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். போட்டியாளர்களைச் சமாளிக்க பங்குதாரர் களோடு கூடிப்பேசி முடிவெடுப்பீர்கள்.

பரிகாரம்: சனி பகவானுக்கு சனிக்கிழமை கருநீல மலர்மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்வது நல்ல பலன்களை அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 5,8,9
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
அதிர்ஷ்டக்கிழமை: சனி


dhanusu

தனுசு: குடும்பத்தில் பணப்புழக்கம் இருக்கும். கடன் தொல்லைகள் நிவர்த்தி ஆகலாம். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். மங்கலகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்தி ஓய்வின்றிப் பணிகளில் ஈடுபடக்கூடும். வருமானம் அதிகமாகலாம்.

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்பான பணி வந்து சேரும். சிலர் பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுவார்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேலைகளை விரைந்து செய்வீர்கள். செய்து கொடுத்த வேலைக்குப் பாராட்டுப் பெற்று மகிழ்வீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கக்கூடும். போட்டியாளர்களைச் சமாளிக்க கூட்டாளிகளுடன் கூடி ஆலோசிக்க நேரலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேய சுவாமிக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சூட்டி, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து வர வினைகள் அகன்று, நன்மைகள் பெருகும்.

அதிர்ஷ்ட எண்: 6,8,9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை: சனி


magaramமகரம்: குடும்பம் சீராக நடந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கலாம். பெண்கள் மத்தியில் ஏற்பட்ட மனவேறுபாடுகள் வீட்டுப் பெரியவர் அறிவுரையால் சமாதானமடையும். கலைஞர்கள் பாராட்டுகளில் கலந்து கொள்ள வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். புதிய ஒப்பந்தத்தால் வருமானம் அதிகமாகலாம். கலைஞர் ஆதரவு பயனளிக்கும்.

உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைத்து மகிழ்வீர்கள். சக நண்பர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினைகளை தவிர்க்கும். சொந்தத்தொழிலில் மற்றவர்கள் குறைசொல்ல முடியாதபடி கவனமாக இருப்பீர்கள். புதிய நபர்களின் மூலம் தொழில் வளர்ச்சிக்கு வழி ஏற்படும். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் குறையாது. வியாபார ஸ்தலத்தை விரிவாக்க, திட்டம் தீட்டுவீர்கள். நிலுவைகள் வசூலாகும்.

பரிகாரம்: குருபகவானுக்கு வியாழக்கிழமை கொண்டைக்கடலை மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்: 3,6,9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை: வியாழன்


kumbamகும்பம்: குடும்பம் சீராக நடைபெறும். சிறு கடன்களால் உருவான தொல்லைகள் குறையும். பெண்களால் முக்கிய காரியம் ஒன்றில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்கள், சகக்கலைஞர்களின் உதவியோடு பணிகளில் சிறப்பாக முன்னேறுவீர்கள். வருமானம் அதிகமாகும். மறக்க முடியாத நிகழ்ச்சியொன்று வீட்டிலோ அல்லது வெளியிலோ நடைபெறலாம்.

உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உதவி கைகளுக்கு வந்து சேரும். கடினமான வேலையொன்றை நண்பர்கள் துணையுடன் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைகள் அதிகமாகும். பண வரவுகளும், கூடும். உதவியாளர்கள் திறமையால் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களில் சிலர், தொழில் ரீதியான பயணம் மேற்கொள்ள நேரலாம். வியாபாரத்தில் வழக்கமான லாபம் காணப்படும். நிலுவைகள் வசூலாகும்.

பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு வந்த வினை அகலும்.

அதிர்ஷ்ட எண்: 1,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: செவ்வாய்


meenamமீனம்: குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் நடைபெறலாம். மகன் அல்லது மகளின் புதிய வேலையால் வருமானம் அதிகமாகும். கசப்பான சில பிரச்சினைகள் இனிமையாக மாறும். கடன்கள் கட்டுக்கு அடங்கி இருக்கும். கலைஞர்கள் பெரிய நிறுவனங்களில் இருந்து வந்த ஒப்பந்தங்களில் பங்கு கொண்டு, பணிகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பண வசதியுடன், புகழும் அதிகமாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு இருந்த எதிர்ப்புகள் மறையும். தள்ளி வைத்த வேலை ஒன்றை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். பணியாளர்களின் நடவடிக்கைகள் மனதுக்கு பிடிக்காமல் போகலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர் ஒருவர் பணியில் அதிக கவனம் செலுத்த நேரலாம். கூட்டு வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறைபடாது. விலைவாசிகள் உயர்வால் விய£பாரம் சிறிது தொய்வடைந்தாலும் பாதிப்புகள் இருக்காது.

பரிகாரம்: துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை மலர் மாலை அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்துவர எண்ணங்கள் வெற்றியாகும். எடுத்த செயல் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி