Home Astrology Weekly Rasi Palan வார ராசிபலன் – 14/11/2015 முதல் 19/11/2015 வரை

வார ராசிபலன் – 14/11/2015 முதல் 19/11/2015 வரை

384

mesahamமேசம்: பழைய பொருட்களை மாற்றி, புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு பெறுவீர்கள். முக்கிய நண்பர்களை சந்திப்பதால் சில பிரச்சினைகள் தீரும். கலைஞர்கள் தங்கள் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் காணப்படுவார்கள். குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் தலை தூக்கும். குடும்ப அங்கத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், பிறகு செய்யலாம் என்று தள்ளி வைத்த வேலையை உடனடியாக செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு வேலைகளை செய்து கொடுத்து பாராட்டுப் பெறுவார்கள். கூட்டுத்தொழிலில்  வியாபாரம் சுமாராக நடந்தாலும், வழக்கமான லாபம் குறையாது.

சந்திராஷ்டமம்: வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 7 மணி வரை

சிறப்புப் பரிகாரம்:– சுதர்சனப் பெருமாளுக்கு செவ்வாய்க்கிழமை துளசி மாலை அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ வளமும், சிறப்புகளும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 4,5,9
அதிர்ஷ்ட நிறம்:–
சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:–
செவ்வாய்


rishabam

ரிஷபம்:  விலை உயர்ந்த பொருட்களின் மீது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பயணங்களில் பாதுகாப்பு அவசியம். கலைஞர்கள், பணிகளில் கலந்து கொள்ள  வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரலாம். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகள் தலை தூக்கினாலும், அவற்றை சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தரப்படலாம். சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகமாகும். முக்கிய நபர் ஒருவருக்கு அவசரம் கருதி, அவரது வேலைக்கு முக்கியத்துவம் தரப்படலாம். கூட்டுத் தொழில்  செய்பவர்களுக்கு, பணியாளர்களின் ஒத்துழைப்பு நல்ல லாபத்தைப் பெற்றுத்தரும்.

சந்திராஷ்டமம்: சனிக்கிழமை இரவு 7 மணி முதல் ஞாயிறு மற்றும் திங்கள் வரை

சிறப்புப் பரிகாரம்:– அம்பாளுக்கு திங்கட்கிழமை
மல்லிகை அல்லது முல்லை மலர்களால் மாலை அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்வது நல்ல பலன் அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,3,5
அதிர்ஷ்ட நிறம்:–
நீலம்
அதிர்ஷ்டக்கிழமை:–
வெள்ளி


mithunam

மிதுனம்: பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து விரும்பிய உதவிகளைப் பெறுவார்கள். கலைஞர்கள் சக நண்பர்கள் இல்லத்து நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து கொண்டு பரிசளித்து மகிழ்வர். குடும்பத்தில் உடன்பிறப்புகள் வழியில் மனக்குறைகள் உருவாகலாம்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியர்கள் விடுமுறையால் கூடுதல் வேலைப்பளுவைச் சந்திக்கலாம். அலுவலகத் தொழில் ரீதியாக சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் பணிகளில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள நேரலாம். புதிய கருவிகள் துணையோடு, பணிகளை விரைவாகச் செய்து கொடுப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிர்பாராத புதிய செலவுகளைச் சந்திப்பீர்கள்.

சந்திராஷ்டமம்: செவ்வாய் மற்றும் புதன்கிழமை வரை

சிறப்புப் பரிகாரம்:– சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிவப்பு வண்ண மலர்மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நலன்களும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,3,5
அதிர்ஷ்ட நிறம்:–
சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:–
ஞாயிறு


kadakam

கடகம்: மங்கலகரமான பொருட்கள் இல்லம் தேடி வரும். பிரிந்த சொந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள். கலைஞர்கள் உற்சாகத்துடன் ஈடுபட்ட வேலை ஒன்றுக்கு, எதிர்பார்த்த வருமானம்  கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகையால் செலவுகள் கூடும். பெண்கள், புதிய ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்க, போட்ட திட்டம் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களில் சிலர், எப்படியும் முடித்து விடலாம் என்று நினைத்த காரியம், தொடர்ந்து கொண்டே போகலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், நமக்கு கிடைக்காது என்று நினைத்த காரியம், தேடி வரக்கூடும். புதிய முயற்சிகளில் எதிர்பாராத வெற்றி உண்டாகி மகிழ்ச்சிப்படுத்தும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். லாபம் அதிகரிக்கும். வேலைக்காரர்களின் பிரச்சினைகளை  சுமுகமாகத் தீர்த்து வைப்பீர்கள்.

சந்திராஷ்டமம்: வியாழன்

சிறப்புப் பரிகாரம்:– லட்சுமி நரசிம்மப் பெருமாளுக்கு
துளசிமாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றிவைத்து
வழிபாடு செய்பவர்களுக்கு செல்வமும், சிறப்பும் அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,9
அதிர்ஷ்ட நிறம்:–
இளம்பச்சை
அதிர்ஷ்டக்கிழமை:–
புதன்


simam

சிம்மம்: சகோதர வழியில் இருந்து பெண்களுக்கு தனவரவு கள் ஏற்படலாம். கலைஞர்களைத் தேடி, பிரபல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். பணவரவால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெற முன்னேற்பாடுகளை  செய்வீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை, சரிவரச் செய்யாமல் உயரதிகாரி களின் கோபப் பார்வையை சந்திக்க நேரலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், தேடி வந்த வாய்ப்பு ஒன்றை நழுவ விட்டுவிட்டு, பின்னர் வருத்தப்படுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், தொழில் போட்டி காரணமாக தொல்லைகளைச் சந்திப்பார்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுப்பீர்கள்.

சிறப்புப் பரிகாரம்:– மாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை
சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு
வழிபாடு செய்து வந்தால் சகல நலன்களும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,6,9
அதிர்ஷ்ட நிறம்:–
இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:–
வெள்ளி


kanni

கன்னி: புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிர முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் இருக்கலாம். பெண்கள், சகோதரி வழி உறவினர்கள் இல்லத்துக்கு சென்ற சமயத்தில் வீண் பேச்சுக்களால் மனவேறுபாடுகளுக்கு உள்ளாவீர்கள். கலைஞர்கள் பணிகளில் ஈடுபடும் போது கவனக்குறை வால் சிறுசிறு காயங்கள் ஏற்படலாம்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் விருப்பப் படி புதிய வேலை ஒன்றை உடனடியாக செய்வீர்கள். சிலருக்குப் பதவிகளில் சிறு மாறுதல்கள் ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளருக்காக வேலையை விரைவாக செய்து கொடுக்க நேரிடும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், சுமாரான லாபம் பெறக்கூடும். புதிய கிளை ஆரம்பிக்கும் முயற்சியைத் தள்ளி வைப்பது சிறந்தது.

சிறப்புப் பரிகாரம்:– அங்காரக பகவானுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ வளம் பெருகும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,5,9
அதிர்ஷ்ட நிறம்:–
இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:–
செவ்வாய்


thulam

துலாம்: பெண்கள் சகோதர வழி உறவுகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மங்கலப் பொருட்களைப் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். கலைஞர்கள் உற்சாகமாக பணிகளில் பங்கு கொண்டாலும் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காமல் போகலாம். குடும்பத்தில், பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பழைய ஒப்பந்தங்களிலேயே எதிர்பார்க்கும் வருமானம் கிடைத்து மகிழக்கூடும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், நிர்வாகத்தின் முன் வைத்த கோரிக்கைகள் தள்ளிப் போக நேரலாம். சக பணியாளர்களுடன் சுமுகமாக நடந்து கொள்வது நன்மை தரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர் ஒருவரால் தொழில் ரீதியான முன்னேற்றம் அடைவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

சிறப்புப் பரிகாரம்:– குருபகவானுக்கு வியாழக்கிழமை
வில்வ மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால்
வாழ்க்கையில் வெற்றியும், வசதிகளும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,5,6
அதிர்ஷ்ட நிறம்:–
வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை:–
வியாழன்


viruchigam

விருச்சிகம்: கணவன் – மனைவி ஒற்றுமை அதிகமாகும். கலைஞர்கள், சகக் கலைஞர்களின் குடும்ப நிகழ்வுக்குக் குடும்பத்துடன் சென்று வரக்கூடும். புதிய ஒப்பந்தங்களைப் பெற தக்கவர்கள் மூலம் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் இருந்தாலும் சீராக நடைபெற்று வரும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், நிறுத்தி வைத்திருந்த வேலையை, உடனடியாக செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், முதலில்  செய்து கொடுத்த வேலைக்குப் பாராட்டும், பரிசும் பெறுவார்கள்.  கூட்டுத் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை அளித்தும், அடிக்கடி கண்காணித்து ஊக்கமளித்தும் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

சிறப்புப் பரிகாரம்:– சனி பகவானுக்கு சனிக்கிழமை
கருநீல மலர் மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபமிட்டு
வழிபாடு செய்து வந்தால் சங்கடங்கள் அனைத்தும் தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,8
அதிர்ஷ்ட நிறம்:–
வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை:–
சனி


dhanusu

தனுசு: மகன் அல்லது மகளின் புதிய வேலையினால் குடும்ப வருமானம் அதிகமாகும். கலைஞர்கள் கடினமாக வேலைகளில் பங்கு கொண்டு சிறு விபத்துக்களை அடையலாம். குடும்பத்தில் பழைய கடன் தொல்லைகள் இருந்தாலும், அதனால் பாதிப்புகள் உண்டாகாது.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, புதிய பொறுப்புவந்து சேரலாம். விடுமுறையில் உள்ளவர்களின் வேலையையும், சேர்த்துச் செய்யும்படி நேரக்கூடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் வருகையின் மூலம் பணவரவுகள் இருக்கும். வேலை அதிகம் இருப்பதால் ஓய்வு காலம் குறையும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணப்படும். நிலுவையிலுள்ள பணத்தை வசூலிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்களோடு இருந்த பிரச்சினை சுமுகமாகத் தீரும். மறைமுக வருமானங்கள் பெருகும்.

சிறப்புப் பரிகாரம்:– ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை
வெற்றிலை மாலை சூட்டி, வெண்ணெய் சாத்தி
வழிபாடு செய்து வந்தால் வீரமும், வெற்றியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,8,9
அதிர்ஷ்ட நிறம்:–
வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை:–
சனி


magaram

மகரம்: சுப நிகழ்ச்சி நடைபெற முன்னேற்பாடுகளைத் தொடங்குவீர்கள். பெண்கள் குல தெய்வ வழிபாடுகள் செய்யக் குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவார்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களிலிருந்து புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். பணவசதிகள் அதிகமாகும். வங்கியில் சேமிப்பு பெருகலாம். திடீர் பிரயாணத்தால் லாபம் உண்டாகும். குடும்பம் சீராக நடைபெறும். சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெண்கள் சமாளித்து விடுவார்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு உயரதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளை அனுபவிக்கும் நிலை உண்டாகும். சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் ஏற்படும். பழைய வாடிக்கையாளர் மூலம், புதிய நபரின் அறிமுகமும், அவரால் பண வரவோடு தொழில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் கணிசமான லாபம் அடைவார்கள். கூட்டாளிகளுக்கு சேர வேண்டிய பங்கை  பிரித்தளிப்பீர்கள்.

சிறப்புப் பரிகாரம்:– தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு
வியாழக்கிழமை வில்வ மாலை சூட்டி, நெய்தீபமிட்டு
வழிபாடு செய்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,5,6
அதிர்ஷ்ட நிறம்:–
வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை:–
வியாழன்


kumbam

கும்பம்: அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை உரிய காலத்தில் செலுத்தாமல் தொல்லைகளுக்கு ஆளாக நேரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சகக்கலைஞர்கள் மூலம் முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஏற்கனவே உள்ள பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி இருந்தாலும் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சமாளிக்கப்படும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்தவைகள் தள்ளிப் போகலாம். சொந்தத் தொழிலில் வேலைகள் இருந்தாலும், வருமானம் கிடைக்க சற்று தாமதமாகும். புதிய முயற்சிகள் எடுக்க வேண்டி வரும். கூட்டு வியாபாரம் சுமாராக நடைபெறும். இருப்பினும் லாபம் குறையாது.

சிறப்புப் பரிகாரம்:– முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு மலர் மாலை அணிவித்து, நெய்த்தீபமிட்டு வழிபாடு செய்வது செல்வமும், சிறப்பும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,5,9
அதிர்ஷ்ட நிறம்:–
இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:–
செவ்வாய்


meenam

மீனம்: சகோதர வழி உறவுகள் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்கள் பங்கு பெறுவார்கள். பெண்களின் சேமிப்பு நல்ல விதத்தில் செலவழியும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புண்டாகும். கலைஞர்கள் நிகழ்ச்சி களில் ஆர்வமுடன் பங்கேற்பார்கள். பிரிந்தவர்கள் உங்களைத் தேடிவரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் அங்கத்தினர்களின் உதவியுடன் பிரச்சினைகளைச் சுலபமாக சமாளிப்பீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரக்கூடும். வீண்பேச்சுக்களால் தொல்லைகளை உருவாக்கிக் கொள்ள நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் அவசரம் கருதி ஓய்வில்லாமல் பணியாற்றுவீர்கள். நவீன கருவிகளைப் பயன்படுத்தி வேகமாக செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் புரிபவர்கள் வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிக்க கூட்டாளிகளுடன் கூடி ஆலோசிப்பீர்கள்.

சிறப்புப் பரிகாரம்:– துர்க்காதேவிக்கு வெள்ளிக்கிழமை
சிவப்பு மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு
வழிபாடு செய்தால் செல்வமும், வெற்றியும் தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,9
அதிர்ஷ்ட நிறம்:–
ஆரஞ்சு
அதிர்ஷ்டக்கிழமை:–
வெள்ளி.