Home Astrology Weekly Rasi Palan வார ராசிபலன் – 18–12–2015 முதல் 24–12–2015 வரை

வார ராசிபலன் – 18–12–2015 முதல் 24–12–2015 வரை

430

mesahamமேசம்: குடும்ப வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகன்று, சுப விரயங்களைச் சந்திப்பீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை தேடி வந்து மகிழ்ச்சிப்படுத்தும். ஆரோக்கியக் குறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலம் பெறுவர். கலைஞர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்த ஆர்வம் காட்டுவார்கள். கடினமான பணிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள், சக ஊழியர்களின் பொறுப்புகளையும் சந்தோஷத்தோடு செய்து பாராட்டுப் பெறுவீர்கள். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். சிலருக்கு விரும்பிய இடங்களுக்கு பணிமாற்றம் கிடைக்கக்கூடும். சொந்தத் தொழிலில் திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நடைபெறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களை அனுசரித்துச் செயல்படுவது நல்லது. அதிக லாபத்தால் புதிய தொழில் தொடங்கலாமா? என்ற எண்ணம் சிலருக்கு தோன்றலாம். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

பரிகாரம்: துர்க்கை தேவிக்கு வெள்ளிக்கிழமை சிவப்பு வண்ண மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபட்டால் முயற்சிகள் நல்ல முறையில் வெற்றியடையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி


rishabamரிஷபம்: குடும்பத்தில் காணப்பட்ட சலசலப்பு மாறி, கலகலப்பு உண்டாகும். பெண்கள் தாய் வீட்டுக்குச் சென்று மங்கலப் பொருட்களும், புதிய துணிகளும் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்புவார்கள். கலைஞர்கள் உற்சாகத்தோடு செயலாற்றுவார்கள். புதிய நபர் அறிமுகங்களால் பணவரவுகள் உண்டாகும். சகக்கலைஞர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைத்து, பாதியில் நின்ற பணிகளைத் தொடருவீர்கள். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிட்டும். சொந்தத்தொழில் செய்பவர்கள், மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் பணிகளை முடித்துக் கொடுப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். கூட்டுத்தொழில் வியாபாரம் கூடுதலான லாபத்தைப் பெற்றுத்தரும். புதிய தொழில் தொடங்குவது பற்றி, பங்குதாரர்களிடம் பேசி முடிவெடுக்கும் நிலை உருவாகலாம்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மருக்கு புதன்கிழமை துளசி மாலை அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் எண்ணங்கள் எளிதாக நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: 
இளம்பச்சை
அதிர்ஷ்டக்கிழமை:
 புதன்


mithunamமிதுனம்: குடும்பத்தில் கடன் தொல்லைகள் தலைதூக்கலாம். பெண்களுக்கு ஆரோக்கியக் குறை தோன்றி மறையும். குடும்பத்தில் மங்கல காரியத்தைப் பற்றி பேசி முடிவு செய்யும் வாய்ப்பு உண்டாகும். கலைஞர்கள் பழைய ஒப்பந்தங்களிலேயே அதிக வருமானம் பெற்று மகிழ்ச்சியடைவார்கள். புதிய வாய்ப்புகள் பெற சகக்கலைஞர்கள் மூலம் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, புதிய பொறுப்புகள் மூலம் பணிச்சுமையும், கெடுபிடியும் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு பயனுள்ளதாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், பணியாளர்களின் ஒத்துழைப்பால் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் புதிய நபர்களின் அவசர வேலைகளை ஏற்றுக் கொண்டு ஓய்வில்லாமல் பணியில் ஈடுபடுவார்கள். விலைவாசி ஏற்றத் தாழ்வுகளால் வியாபாரம் சுமாராக காணப்படும். பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக இருப்பது அவசியம்.

பரிகாரம்: துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை மலர் மாலை அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நலன்களும் தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி


kadakamகடகம்: குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை இருந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் முக்கிய தகவல் வந்து சேரும். குல தெய்வ கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புஉண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் பண வரவு கிடைக்கும். சகக்கலைஞர்கள் ஆதரவுடன் உங்கள் பணிகளில் செயல்படுவீர்கள். கடினமான பணிகளில் கவனமாக ஈடுபடுவது காயங்களை தவிர்க்கும்.

உத்தியோகத்தில் சிலருக்கு, எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். வேலைப்பளு அதிகம் இருந்தாலும் உற்சாகத்துடன் முடித்துப் பாராட்டுப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு உதவியாக இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்கள், பணிகளை விரைவாக செய்து முடிக்க நவீனக் கருவிகளைப் பயன்படுத்துவார்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் காணப்படும். புதிய கிளை தொடங்குவது பற்றி கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள்.

பரிகாரம்: சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
அதிர்ஷ்ட நிறம்:
சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:
ஞாயிறு


simamசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்கள் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரையாக செல்லும் சந்தர்ப்பம் ஏற்படலாம். சகோதரர் வழி உறவுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் செல்லும் நிலை வரும். கலைஞர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வருமானம் இல்லாமல் போகலாம். சகக்கலைஞர்கள் உதவுவார்கள்.

உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளை சிறப்பாக செய்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் வீண் பிரச்சினைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். நிலுவையில் இருந்த தொகை வசூலாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, தொழில் போட்டியாளர்களால் லாபம் குறையக்கூடும். போட்டிகளைச் சமாளிக்க கூட்டாளிகளுடன் இணைந்து புதிய திட்டம் தீட்டுவீர்கள்.

பரிகாரம்: சுதர்சனப் பெருமாளுக்கு புதன் கிழமை துளசிமாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல சம்பத்துகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்:
இளம்பச்சை
அதிர்ஷ்டக்கிழமை:
புதன்


kanniகன்னி: குடும்பம் சிரமமில்லாமல் நடைபெறும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பெண்கள் வெளியூர் சென்றுவர நேரலாம். ஆலய தரிசனமும், மகான்களின் ஆசிகளும் கிடைக்கும். கலைஞர்கள் புதிய பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். புதிய வேலை வாய்ப்புகளும், பணவசதிகளும் கிடைக்கும். சகக் கலைஞர்களின் மூலம் பெரிய நிறுவனங்களில் வாய்ப்புப் பெற முயற்சி செய்வீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சக ஊழியர்களின் பொறுப்புகளையும் சேர்த்துச் செய்யும் நிலை ஏற்படலாம். பணிகளை விரைந்து முடிக்க அயராது உழைப்பீர்கள். பணிகளில் கவனமாக இல்லாவிட்டால், உயர் அதிகாரியின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சொந்தத்தொழில் செய்பவர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைகளின் அவசரம் கருதி ஓய்வில்லாமல் பணிகளில் ஈடுபடுவார்கள். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்றாக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை செந்தாமரை மலர் சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்:
இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:
வெள்ளி


thulamதுலாம்: குடும்பச் செலவுகளைக் குறைக்க ஆலோசிப்பீர்கள். சலுகை விலைப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட காலமாக பிரிந்த உறவினர் உங்களைத் தேடி வரக்கூடும். தெய்வீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு உண்டு. கலைஞர்கள் பிரபல நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகளைப் பெற முயற்சி செய்யலாம். சகக்கலைஞர்களுக்குப் பரிசளித்து மகிழ்வீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், அவசியமான வேலையை விரைவாக முடிக்க அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். சொந்தத்தொழிலில் புதிய வாடிக்கையாளர் மூலம் முன்னேற்றம் ஏற்படும். மூலப் பொருட்களை வாங்கி சேகரிப்பீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் பங்குதாரர் களின் ஆலோசனைகளோடு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். முதலீடுகளை அதிகரிக்கத் திட்டமிடுவீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வாய்க் கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சிறப்புகள் பல தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9
அதிர்ஷ்ட நிறம்: 
இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:
 செவ்வாய்


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பணத்தட்டுப்பாடு காரணமாக செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க நேரிடும். சுபகாரியம் ஒன்றைப் பற்றி பேச சந்தர்ப்பம் உண்டாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்றாலும், எதிர்பார்க்கும் வருமானம் தாமதம் ஆகும். கடினமான பணிகளில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது அவசியம். சகக் கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகள் மூலம் கூடுதல் வேலைப்பளுவை சந்திக்கலாம். சக ஊழியர்களின் சொந்த விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணிகளில் மிகுந்த கவனம் தேவை. சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய நபர்கள் மூலம் அவசர வேலைகளைப் பெறுவார்கள். புதிய முதலீடு பற்றிய சிந்தனைகளில் கவனம் செலுத்துவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் காணப் படலாம். பணியாளர்களின் நடவடிக்கைகளை கவனித்து, அடிக்கடி அறிவுரை கூறுவீர்கள்.

பரிகாரம்: லட்சுமி ஹயக்ரீவப் பெருமாளுக்கு வியாழக்கிழமை துளசி மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் வந்தடையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,6
அதிர்ஷ்ட நிறம்:
வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை:
வியாழன்


dhanusu

தனுசு: குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். இருப்பினும் தாய்வழியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, பெண்கள் கவனமாக பேசுவது நல்லது. பெண்களின் சேமிப்பு நல்ல விதத்தில் செலவழியும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சியடைவார்கள். குடும்பத்துக்கு தேவையான நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு அலுவலகத்தில் பொறுப்பான பதவிகள் கிடைக்கக்கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். வீண்பேச்சுகளைத் தவிர்ப்பது அவசியம். எதிர்பார்த்த முக்கிய மாற்றங்கள் நிகழும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முதலில் செய்தளித்த வேலைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் நிலை வரலாம். கூட்டுத் தொழில் வியாபாரம் நன்றாக நடைபெற்று, அதிக லாபம் கிடைக்கும். பணப் பொறுப்பில் உள்ளவர்களைச் சரியாகக் கண்காணிக்காவிட்டால், இழப்புக்கு ஆளாக நேரிடும்.

பரிகாரம்: ஆஞ்சநேய சுவாமிக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சூட்டி, வெண்ணெய் சாத்தி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் பகை விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,8
அதிர்ஷ்ட நிறம்: 
வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை: 
சனி


magaramமகரம்: குடும்பத்தில் அமைதி காணப்பட்டாலும், சிறுசிறு பிரச்சினைகள் வந்து போகும். தாய் மாமன் வழி உறவுகளில் நடைபெறும் மங்கல நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு, புதிய உடைகளும், மங்கலப் பொருட்களும் கிடைக்கலாம். கலைஞர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்து வந்த ஒப்பந்தங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, உயரதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளை அனுபவிப்பீர்கள். முயற்சி செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காணப்படும். அலுவலக ரீதியான நீண்ட கால பிரச்சினைகள் தீரும். புதிய முயற்சிகள் பலன் கொடுக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். புதிய நபர்கள் மூலம் பணவரவு கிட்டும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வரும் லாபத்தினால், புதியதொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு சனிக்கிழமை கருநீல மலர் மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷம் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,8
அதிர்ஷ்ட நிறம்:
வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை:
சனி


kumbamகும்பம்: குடும்பத்தில் மகிழ்வான போக்கு காணப்படும். பெண்கள் மலிவு விலைப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பார்கள். நீண்ட காலம் வராமல் இருந்த உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் மூலம் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களைப் பெற்று மகிழ்வார்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், அதிக ஆதாயமுள்ள வேலைகளில் சேர முயற்சிப்பார்கள். பணியில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். ஊழியர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி இருக்கும். சொந்தத்தொழிலில் புதிய நபர்களின் வருகையால், பொருள் வரவு கூடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். மூலப்பொருட்களை வாங்கி சேகரிப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். தொழில் போட்டிகளை சமாளிப்பது பற்றி கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆலோசிப்பீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை வில்வ மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் எண்ணங்கள் வெற்றியாகி எல்லா நலனும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,9
அதிர்ஷ்ட நிறம்:
வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை:
வியாழன்


meenamமீனம்: குடும்பத்தில் குதூகலம் காணப்பட்டாலும், சிறு சிறு பிரச்சினைகளும் இருக்கலாம். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு புது உடைகளும் மங்கலப் பொருட்களும் கிடைக்கும். புகழ்தரும் புதிய ஒப்பந்தங்கள் மூலம் கலைஞர்களுக்கு பண வரவு உண்டு. சிலருக்கு பயணங்களால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், உயரதிகாரிகளின் உதவியால் முன்னேற்றம் காண்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் தேடிவரக்கூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிகளை விரைந்து முடிக்க சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். வரவேண்டிய நிலுவைகள் வசூலாவதில் சிரமம் இருக்காது. புதிய நபர்கள் வருகையால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவு இருக்கும். பங்குதாரர்களின் யோசனையை செயல்படுத்த முனைவீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வாய்க் கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால் செல்வம் பெருகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,9
அதிர்ஷ்ட நிறம்:
இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:
செவ்வாய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here