Home Astrology Weekly Rasi Palan வார ராசிபலன் – 21/11/2015 முதல் 27/11/2015 வரை

வார ராசிபலன் – 21/11/2015 முதல் 27/11/2015 வரை

403

mesahamமேசம்: ஐந்தாம் வீட்டிலிருக்கும் குரு பகவான் இருப்பதால் புதிதாகக் கற்பதற்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும். மாணவர்கள் பாராட்டும் புகழும் பெறுவீர்கள். செலவைக் குறிக்கும் பன்னிரண்டாம் வீட்டில் கேது இருப்பதால் மனதில் பதற்றம் நீங்கி, அமைதி நிலவும். எட்டில் சூரியன். உஷ்ணாதிக்கப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். லாபத்தைக் குறிக்கும் பதினோராம் வீட்டிற்கு சந்திரன் வருகிறார். எனவே தாய் வழி உறவினரால் மூலம் நன்மையும் லாபமும் கிடைக்கும். குளிர்ச்சியான பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமையால் செய்த உணவுப்பொருட்களை அளியுங்கள். சனிக்கிழமை நவகிரகம் சுற்றுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,9
அதிர்ஷ்ட நிறம்:–
இளம் பச்சை
அதிர்ஷ்டக்கிழமை:–
புதன்


rishabam

ரிஷபம்: பதினொன்றுக்குரிய சுபகிரகமாகிய குரு நல்ல முறையில் நான்காம் வீட்டில் இருப்பதால் லாபம் அதிகரிக்கும்; உங்களைக் கற்பிக்கும் பணியிலும் ஈடுபடுத்துவார். ஏழில் சூரியன் இருப்பதால் கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. ஐந்தாம் வீட்டிலிருக்கும் பலம் பொருந்திய புதன், குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அதிகரித்து உங்களுக்குப் பெருமை, கர்வம் ஏற்படுத்துவார். சனி ஏழாம் வீட்டில் இருப்பதால் உத்யோக விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் கவலை வேண்டாம்.

பரிகாரம்: சனிக்கிழமை ஏழைகளுக்கு உணவு அளியுங்கள். வெள்ளிக்கிழமை கோயிலுக்கு மொச்சை அளியுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,9
அதிர்ஷ்ட நிறம்:–
இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:–
செவ்வாய்


mithunam

மிதுனம்: குரு பகவானுக்குச் செய்யும் பரிகாரங்களால் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். நாலில் உள்ள செவ்வாய் வீடு வாங்கும் உங்கள் முயற்சிக்கு உதவுவார், அதேசமயம் தாயாருடன் கோபதாபம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாலில் சுக்கிரனும் புதனும் இருப்பதால் அழகு நிறைந்த செடி-கொடிகள் சூழ்ந்த வீடு வாங்குவதற்கு வேளை வரும். பத்துக்குரிய குரு மூன்றில் இருப்பதால் உத்யோக விவகாரங்களில் தடை, முன்னேற்ற சுணக்கம் இருந்தாலும் கவலை வேண்டாம்.

பரிகாரம்: வியாழக்கிழமை கருப்புக் கொண்டைக்கடலையால் செய்த உணவைக் கோயிலில் விநியோகம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,5,9
அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:– வெள்ளி


kadakam

கடகம்: ராசிக்கு இரண்டாம் வீட்டிலிருக்கும் குரு பகவான் குடும்பத்தில் சுபிட்சம், ஒற்றுமை, சுப காரியங்களை அதிகரிப்பார். ஐந்திலுள்ள சூரியனால் குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் வரும். எட்டாம் வீட்டில் சந்திரன். சந்திராஷ்டமம். பேச்சில் கவனம் தேவை. பழகு முறைகளில் எச்சரிக்கை வேண்டும். அலுவலக வேலைகளில் அலட்சியம் கூடாது. அக்கம் பக்கத்தினருடன் யோசித்துப் பழகுங்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமை சிவனை வணங்குங்கள். ‘நமசிவாய’ நாமம் சொல்லுங்கள். முடிந்தால் ஏழைப் பெண் குழந்தைக்கு உதவி செய்யுங்கள்.

சந்திராஷ்டமம்: 19.11.2015 வியாழன் முதல் 21.11.2015 சனிக்கிழமை வரை.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,6,9
அதிர்ஷ்ட நிறம்:– வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை: – திங்கள்


simam

சிம்மம்: செல்வாக்கும் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை, காதலில் வெற்றி உண்டாகும். சூரியன் புதனுடன் நாலாம் வீட்டில் இருப்பதால் செலவுகள் இருந்தாலும், நல்ல பலன் இருக்கும். அரசாங்க நன்மை ஏற்படும். வார மத்தியில் சந்திராஷ்டமம் வருகிறது. அதிகக் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய செயல்கள் விமரிசிக்கப்படலாம்; எரிச்சலுறாமல் அமைதியாக இருங்கள். இரண்டாம் வீட்டிலுள்ள சுக்கிரனால் பேச்சில் கவர்ச்சி கூடும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் நவகிரகம் சுற்றி, சந்நதியில் கோதுமை அளியுங்கள். ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுங்கள்.

சந்திராஷ்டமம்: 21.11.2015 சனிக்கிழமை முதல் 23.11.2015 திங்கட்கிழமை வரை.

அதிர்ஷ்ட எண்கள்:– 6,8,9
அதிர்ஷ்ட நிறம்:– வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை:– சனி


kanni

கன்னி: ஏழில் சந்திரனும் கேதுவும் இணைவது கணவன் – மனைவிக்குள் ஒற்றுமைக் குறைவை உண்டாக்கும். எந்த சச்சரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சூரியன், புதனுடன் மூன்றாம் வீட்டில் இருப்பதால் செலவுகள் கட்டுப்படும். சகோதரர்களால் நன்மையும் லாபமும் கிடைக்கும். பன்னிரண்டிலிருக்கும் குரு பகவானால் நிறைய செலவுகள் ஏற்பட்டாலும் அதெல்லாம் நன்மையும், லாபமும் தரும்.

பரிகாரம்: வியாழக்கிழமை குரு பகவானையோ தக்ஷிணாமூர்த்தியையோ குருவாயூரப்பனையோ அல்லது இஷ்டப்பட்ட குருநாதரையோ வணங்குவது மிக நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: 23.11.2015 திங்கட்கிழமை முதல் 25.11.2015 புதன் வரை.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,8
அதிர்ஷ்ட நிறம்:– கருநீலம்
அதிர்ஷ்டக்கிழமை:– சனி


thulam

துலாம்: உள்நாட்டில் உள்ள நண்பர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். இரண்டில் புதன் இருப்பதால் பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும், நன்மைகள் உண்டாகும். பன்னிரண்டில் உள்ள சுக்கிரன் நிறைய செலவுகள் வைத்தாலும் அவை எல்லாமே ஆடை அணிமணிகள் சார்ந்த செலவுகளாகவே இருக்கும். ஆறாம் வீட்டில் கேது இருப்பதாலும் அந்த வீட்டை ராகு பார்ப்பதாலும் வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் உதவுவார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வணங்குங்கள். முடிந்தால் சிறு வெள்ளிப் பொருளை யாரேனும் ஏழைப்பெண்ணுக்கு தானமாகக் கொடுக்கலாம்.

சந்திராஷ்டமம்: 25.11.2015 புதன் முதல் 27.11.2015 வெள்ளி வரை.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,6,9
அதிர்ஷ்ட நிறம்:– மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை:– வியாழன்


viruchigam

விருச்சிகம்: ஐந்தாம் வீட்டை ராகு பார்ப்பதால் குழந்தைகளுக்கு வெளிநாட்டு ஆதாயங்கள் அதிகரிக்கும் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பன்னிரண்டில் உள்ள சூரியன் அரசாங்க நன்மைகளைப் பெற்றுத் தருவார். இரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் பேச்சினால் சுப காரியங்கள் நிறைவேறும். பதினொன்றாம் வீட்டில் மூன்று கிரகங்கள் இருப்பதால் பல விதமான லாபமும் வருமானங்களும் கிடைக்கும். அவற்றில் ஒன்றாக செவ்வாய் இருப்பதால் திடீர் லாபம் கிடைக்கும். அந்த வீட்டில் ராகுவும் இருப்பதால் வெளிநாட்டு வருமானம் பெருகும்.

பரிகாரம்: திங்கட்கிழமையில் வெண்ணிற உணவுப் பொருளை அருகிலுள்ள கோயிலில் அளியுங்கள். கோயிலுக்கு சங்கு வாங்கித் தரலாம்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,9
அதிர்ஷ்ட நிறம்:– இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:– செவ்வாய்


dhanusu

தனுசு: தன்னம்பிக்கையும் நிம்மதியும் ஏற்படும். வெற்றிகளால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். ஏழரைச்சனி காலம் என்பதால் யாரிடமும் நெருங்கிப் பழக வேண்டாம். பன்னிரண்டாம் வீட்டில் சூரியன் இருப்பதால் அரசாங்க விஷயங்களில் தடை, தாமதம் ஏற்படுவது போலத் தோன்றலாம். முயற்சியை விசுவாசமாகச் செய்துவிட்டு. பாரத்தை கடவுள்மேல் போடுங்கள்; எல்லாம் நல்லபடியாக முடியும். ராசிநாதன் குரு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எங்கும், எதிலும் வெற்றிதான்.

பரிகாரம்: சனிக்கிழமை எள்ளால் செய்த இனிப்பைக் கோயிலில் கொடுப்பது நன்மை தரும். முடிந்தால் திருநள்ளாறு சென்று வழிபட்டு வாருங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,9
அதிர்ஷ்ட நிறம்:– இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:– வெள்ளி


magaram

மகரம்: குருபகவானின் அமைப்பு தரும் விபரீத ராஜயோகம், திடீரென்று நினைத்துப்பாராத உயரத்தில் உங்களை அமர வைக்கும். பதினோராம் வீட்டில் கிரகங்கள் குவிந்திருப்பதால் பலவகை லாபங்கள் உண்டு. பதினேராம் வீட்டில் சூரியன் இருப்பதால் எல்லாம் லாபமாக முடியும். எட்டிலுள்ள குரு உழைப்புக்கு உடனடி லாபம் கிடைக்காமல் தாமதப்படுத்துவார். ஆனால், உரிய நேரத்தில் கிடைக்க வேண்டியது கட்டாயம் கிடைக்கும். ஆரோக்ய வீட்டில் குரு இருப்பதால் வயிற்றில் பிரச்னைகள் ஏற்படலாம்; உணவு விஷத்தில் கவனமாக இருங்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமை நவகிரகம் சுற்றி மூன்று நெய்விளக்குகள் ஏற்றி குரு பகவானை வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,9
அதிர்ஷ்ட நிறம்:– பச்சை
அதிர்ஷ்டக்கிழமை:– புதன்


kumbam

கும்பம்: லாபத்தைக் குறிக்கும் பதினோராம் வீட்டை குரு பார்ப்பதாலும் அது குரு பகவானின் வீடு என்பதாலும் திடீர் லாபங்கள் நல்ல வழியில் வரும். காத்திருந்த சம்பள உயர்வு வரும். ராசிக்கு நேரடி குரு பார்வை வந்திருப்பதால் மனதில் உயர்ந்த எண்ணங்கள் ஏற்படும். அதனால் முயற்சி செய்து சுப காரியங்கள் நிகழ்த்துவீர்கள். உங்களுக்கும் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கக் கூடும். பத்தாம் வீட்டில் சூரியனும் புதனும் இருப்பதால் புதிய வேலை, முயற்சி செய்வோருக்கு அரசாங்க உத்யோகம் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லிப் பிள்ளையாருக்கு நெய்விளக்கு ஏற்றுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,5,6
அதிர்ஷ்ட நிறம்:– வெண்மை
அதிர்ஷ்டக்கிழமை:– திங்கள்


meenam

மீனம்: ராசியிலுள்ள கேது சில சமயங்களில் ஆரோக்யக் குறைவை உண்டாக்கலாம், எனினும் ராசிநாதன் குரு என்பதால் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. பன்னிரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் சுப செலவுகள் ஏற்படும். மனதில் தீய எண்ணங்களும் முறையற்ற விருப்பங்களும் அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ராசிக்குரிய குரு ஆறாம் வீட்டில் இருப்பதால் நண்பர்கள் நன்மை செய்வார்கள். எனினும் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்று நவகிரகத்தைச் சுற்றுங்கள். சனிக்கிழமை ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,5,6
அதிர்ஷ்ட நிறம்:– இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை:– ஞாயிறு