Home Astrology Weekly Rasi Palan வார ராசிபலன் – 2/1/2016 முதல் 8/1/2016 வரை

வார ராசிபலன் – 2/1/2016 முதல் 8/1/2016 வரை

859

mesaham

மேசம்: ஆறில் குரு பகவான் அதிசாரமாக நகர்வதால் நண்பர்களால் நன்மை ஏற்படும். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். கடனுக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு அது சிரமமின்றிக் கிடைக்கும். ஏற்கனவே வாங்கிய கடன்கள் வேகமாக அடையும். புதன் ஒன்பதாம் வீட்டில் வக்கிரமடைந்திருப்பதால் உடல் கோளாறு பெரிதாக ஏற்பட்டாலும், பிரச்னை ஏதுமின்றி எளிதாக குணமாகி நிம்மதி அளிக்கும்.

பரிகாரம்: துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். விநாயகர் அகவல் சொல்லுங்கள்.

சந்திராஷ்டமம்: 5.1.2016 செவ்வாய் முதல் 8.1.2016 வெள்ளி வரை.


rishabamரிஷபம்: ஏழிலுள்ள சுக்கிரனால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் நிலவும். சனி ராசியைப் பார்ப்பதால் எதிலும் சிறு தடங்கல், தாமதம் என ஏற்பட்டாலும், குரு பகவான் நல்ல நிலையில் இருப்பதால் பிரச்னை இருக்காது. எட்டாம் வீட்டிலுள்ள புதன் ஆரோக்யத்தைக் காப்பார். ஐந்தாம் வீட்டிலுள்ள குரு குழந்தைகளை வெற்றியடையச் செய்வார்.

பரிகாரம்: அனுமனுக்கு விளக்கேற்றுங்கள். அனுமன் ஸ்லோகங்கள் சொல்லுங்கள்.

சந்திராஷ்டமம்: 8.1.2016 வெள்ளி முதல் 10.1.2016 ஞாயிறு வரை.


mithunamமிதுனம்: ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் திடீர் புகழ் அடைவார்கள். பத்தாம் வீட்டிற்குத் தற்போது குரு பார்வை கிடைத்திருப்பதால் உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆறாம் வீட்டிலுள்ள சுக்கிரனால் நண்பர்களுடன் நல்ல முறையில் நட்பு நிலவும். நாலாம் வீட்டிலுள்ள குரு அருளால், புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு திடீரென்று படிப்பில் ஆர்வம் உண்டாகி வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை கோயிலில் சூரியனுக்கு செப்புத்தட்டில் கோதுமை படைத்து இரண்டையும் தானமாக அளியுங்கள்.


kadakamகடகம்:நான்காம் வீட்டிலுள்ள செவ்வாய் அருளால் புதிய வீடு வாங்குவீர்கள். மருத்துவக் கல்வி மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெறுவீர்கள். ஐந்தில் சனி இருப்பதால் குழந்தைகளின் முன்னேற்றம் சற்று தாமதப்படும். ஆனால் ,ஐந்தில் உள்ள சுக்கிரன் குழந்தைகளைப் புகழ் பெற வைப்பார். குரு சற்று நகர்ந்திருப்பதால் குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடப்பதில் குழப்பம், தடை, தாமதம் என ஏற்படலாம்; ஆனால், பயம் வேண்டாம், மனநிறைவாகவே முடியும். பத்தாம் வீட்டிலுள்ள கேது அறிவாற்றலைப் பெருக்கி உத்யோகத்தைச் சிறக்கச் செய்வார்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை குருவாயூரப்பனை வணங்கி நெய் விளக்கேற்றுங்கள்.


simamசிம்மம்: குரு பகவான் இரண்டாம் வீட்டிற்கு வந்திருப்பதால் குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறும். பேச்சினால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்கள் சேருவார்கள். இரண்டிலுள்ள ராகு குடும்பத்தில் யாரையேனும் வெளிநாட்டுக்கு அனுப்புவார்! ஐந்தாம் வீட்டில் புதன் இருப்பதால் குழந்தைகள் புத்திசாலித்தனத்தால் பாராட்டும் புகழும் பெறுவார்கள். எட்டாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். பத்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் உத்யோகம், தொழில் சிறக்கும்; லாபம் கூடும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை நவகிரக சந்நதியில் கருப்பு உளுந்து அளியுங்கள்.


kanni

கன்னி: குரு பகவான் தற்காலிகமாக உங்கள் ராசியின் மீது அமர்ந்திருக்கிறார். ஐந்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். தள்ளிப் போய்க்கொண்டிருந்த கோயில் பயணங்கள் இப்போது அமையும். இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் பேச்சில் மிகுந்த கவனம் தேவை. கோபம் வரும்போது பேசாதிருப்பது நல்லது. நான்கில் புதன் இருப்பதால் பசுமை சூழ்ந்த வீடு வாங்கக்கூடும். ராகு ராசிமீது அமைந்திருப்பதால் வெளிநாட்டு விவகாரங்களில் ஈடுபாடு அதிகரித்து நன்மை உண்டாகும்.

பரிகாரம்: வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய் விளக்கேற்றி கருப்புக் கொண்டைக் கடலை கொடுக்கவும்.


thulamதுலாம்:குரு பகவான் தற்காலிகமாகப் பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்திருப்பதால் திருமணம் போன்ற சுபசெலவுகள் ஏற்படும். அதனால் நன்மை, மகிழ்ச்சி, நிம்மதி ஏற்படும். ராசியின் மீது செவ்வாய் இருப்பதால் திடீர் நிகழ்வுகள் ஏற்படும். கோபத்தை அறவே துறப்பது மிக அவசியம். ஐந்தாம் வீட்டுக்கு உரிய சனி இரண்டாம் வீட்டில் இருப்பதால் குழந்தைகளுக்கு நன்மை ஏற்படும்; உங்களுடைய நிர்வாகத்திறமை அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகருக்கு அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு கொடுக்கவும்.


viruchigamவிருச்சிகம்: பதினோராம் வீட்டில் குரு இருப்பதால் திடீரென்று லாபமும் வருமானமும் அதிகரிக்கும். அதே வீட்டில் ராகுவும் இருப்பதால் வெளிநாடு சம்பந்தமான நன்மைகளும் லாபங்களும் கிடைக்கும். இரண்டாம் வீட்டில் புதன் இருப்பதால் பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். பன்னிரண்டில் ராசிநாதன் செவ்வாய் இருப்பதால் தன்னம்பிக்கை குறையலாம், அதை அனுமதிக்காதீர்கள். ஐந்தாம் வீட்டை ராகு பார்ப்பதால் வெளிநாடு சம்பந்தமான நன்மைகள் உங்கள் மகன் அல்லது மகளுக்குக் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை எள்ளால் செய்த இனிப்பை ஏழைகளுக்கு அளியுங்கள்.


dhanusuதனுசு: ராசியின்மீது புதன் இருப்பதால் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் திறமையால் பெரும்புகழ் அடைவீர்கள். பத்தாம் வீட்டில் கிரகங்கள் கூடியிருப்பதால் உத்யோகத்தில் பலவிதமான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்; அதனால் அதிக லாபம் இல்லை என்ற பிரமையும் ஏற்படும். நான்காம் வீட்டில் இருக்கும் கேது சொந்த வீடு வாங்குவதில் சிறியளவில் குழப்பம், தாமதம் ஏற்படுத்த முயன்றாலும் வாரக்கடைசியில் பிரமிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்படும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாம் அல்லது கேட்கலாம்.


magaramமகரம்: ஒன்பதாம் வீட்டிற்குத் தற்காலிகமாக வந்திருக்கும் குரு பகவான் உங்கள் தந்தையின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்துவார். தந்தைக்கு இவ்வளவு காலம் காத்திருந்த தடை ஒன்று விலகி, நிம்மதி, மகிழ்ச்சி, நன்மை, லாபம் ஏற்படும். மூன்றில் கேது இருப்பதால் மூத்த சகோதர, சகோதரிகளுக்கு சிறு பிரச்னைகள் ஏற்படுவது போல் தோன்றினாலும் வாரக்கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி காரணமாக அவை சரியாகும். ராசியை குரு பார்ப்பதால் நன்மை அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை நவகிரகம் சுற்றி முருகர் ஸ்லோகங்களை சொல்லுங்கள்.


kumbamகும்பம்: இவ்வளவு காலம் உங்கள் ராசிக்கு குரு பார்வை இருந்தது. குருவின் சிறு மாறுதல் காரணமாக சிறு தடை, தாமதம் ஏற்படுவதுபோல் தோன்றினாலும் அதெல்லாம் சிறிது காலத்திற்குத்தான்; விரைவில் எல்லாம் சரியாகும். ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் தந்தையின் வாழ்வில் திடீர் நிகழ்ச்சி ஒன்று நிகழும். பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் வேலை பார்க்கும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை நவகிரகம் சுற்றி இனிப்பு விநியோகம் செய்யுங்கள்.

சந்திராஷ்டமம்: 31.12.2015 வியாழன் முதல் 3.1.2016 ஞாயிறு வரை.


meenamமீனம்: ராசிக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் தொழில் முன்னேற்றம், தர்ம சிந்தனை, வாழ்வில் வெற்றி என ஏற்படும். பத்தாம் வீட்டிலுள்ள புதனால் தொழிலில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் – தந்தையின் புகழ் அதிகரிக்கும். தந்தை-தாய்க்கிடையே இருந்த அபிப்ராய பேதங்கள் குறையும். ராசியைப் பல கிரகங்கள் பார்ப்பதால் வாழ்க்கை ஒருநாள் போல் மற்றொரு நாள் இருக்காது.

பரிகாரம்: துர்க்கை ஸ்லோகங்களை சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

சந்திராஷ்டமம்: 3.1.2016 ஞாயிறு முதல் 5.1.2016 செவ்வாய் வரை.