Home Astrology Weekly Rasi Palan வார ராசிபலன் – 25–12–2015 முதல் 31–12–2015 வரை

வார ராசிபலன் – 25–12–2015 முதல் 31–12–2015 வரை

553

mesahamமேசம்: குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவார்கள். கலைஞர்கள் வாய்ப்பு களைப் பெற தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சகக்கலைஞர்கள் இல்லத்து நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று கலந்து கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்தாவிட்டால் உயரதிகாரிகளின் பார்வையில் தென்படும் குறைகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், ஏற்கனவே செய்து கொடுத்த பணியில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுக்கும் சூழல் உருவாகும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வழக்கமான லாபம் காணப்படும். பணியாளர்களின் குறைகளை சரி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவுகளை எடுப்பீர்கள்.

பரிகாரம்: சனிபகவானுக்கு சனிக்கிழமை கருநீல மலர் மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபமிட்டு, எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டால் வந்தவினை அகன்று வளர் செல்வம் தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6,8,9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை: சனி


rishabamரிஷபம்: குடும்பத்தில் இருந்து வந்த சிறு சிறு கடன் தொல்லைகள் அகலும். மகன் அல்லது மகள் தொடர்பான மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கலாம். கலைஞர்கள் தங்கள் பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். பெரிய நிறுவனத்தில் இருந்து ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். வருமானம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, பதவி உயர்வு ஏற்படலாம். தள்ளி வைத்த வேலையை உடனடியாக செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வேலைப்பளு அதிகரிக்கும். மூலப் பொருட்களை வாங்கிச் சேகரிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு, தொழில் விருத்திக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வடை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்பவர்களுக்கு தீவினைகள் பறந்தோடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை: சனி


mithunamமிதுனம்: குடும்பத்தில் பண நடமாட்டம் இருக்கும். சிறு கடன்கள் பைசலாகும். பெண்கள் வெளியில் செல்லும்போதும், அடுப்படியில் பணி செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்கள் பணிகளில் கலந்து கொள்ள வெளியிடங்களுக்குப் பயணமாகும் நிலை ஏற்படலாம். பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தத்தால் புகழும், பொருளும் சேரும்.

உத்தியோகத்தில் சிலருக்கு, அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். சக நண்பர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். சொந்தத் தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களின் திருப்தியால் உங்கள் செல்வாக்கு கூடும். புதிய நபர் ஒருவரால் தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். வியாபார ஸ்தலத்தை விரிவாக்குவது பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை: வியாழன்


kadakamகடகம்: குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை, உடனுக்குடன் சரி செய்து விடுவீர்கள். சேமிப்பு நல்ல விதத்தில் செலவழி  யும். கலைஞர்கள் புதிய வாய்ப்பைப் பெற்று பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவார்கள். எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காவிட்டாலும் தொழிலில் திருப்தி காணப்படும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லா விட்டால் உயரதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சக ஊழியர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது நல்லது. சொந்தத்தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் புரிந்து கொண்டு செயல்களில் ஈடுபடுவது நல்லது. கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வழக்கமான லாபம் காணப்படும். பணியாளர்களை கண்காணித்து அவர்களின் மனவேறுபாடுகளை அகற்றுவீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் செய்தவினை அகன்று சிறப்பான வாழ்வு உருவாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: செவ்வாய்


simamசிம்மம்: குடும்பத்தில் அமைதி காணப்பட்டாலும், சிறு சிறு பிரச்சினை களும் அவ்வப்போது தோன்றக்கூடும். மகன் அல்லது மகள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்வது பல பிரச்சினைகளை தீர்க்க வழிவகுக்கும். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் மூலம் புதிய ஒப்பந்தங்களைப் பெறக் கூடும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காமல் போகலாம்.

உத்தியோகத்தில் சிலருக்கு, எதிர்பாராத இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். பணியாற்றும் அலுவலகம் பற்றி புதிய நபர்களிடம் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய நபர்களிடம் இருந்து ஒப்பந்தங் களைப் பெறக்கூடும். முன்னர் செய்து கொடுத்த வேலையில் காணப்படும் சிறிய குறைபாட்டை சரி செய்து கொடுப்பீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. போட்டியாளர்களை சமாளிப்பது பற்றி கூட்டாளிகளுடன் விவாதிப்பீர்கள்.

பரிகாரம்: மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை செந்தாமரை மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி


kanniகன்னி: குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு கடன் தொல்லைகளை சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள். பெண்கள் மங்கல நிகழ்வுகளில் கலந்து கொள்ள குழந்தைகளுடன் சென்று வருவார்கள். கலைஞர்கள், தீவிர முயற்சியுடன் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் பண ஆதாயம் ஏற்பட்டு பொருளாதார நிலை சீர்படும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய கடன் தொகைகள் கைகளுக்குக் கிடைத்து, பாதியில் நிறுத்தியிருந்த வேலையை தொடர்வார்கள். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் தொழிலில் முன்னேற்றமும் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காணப்படும். நிலுவையில் இருக்கும் பணத்தை வசூலிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மப் பெருமாளை புதன்கிழமை துளசி மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல சம்பத்துகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை
அதிர்ஷ்டக்கிழமை: புதன்


thulamதுலாம்: குடும்பத்தில் இருக்கும் சிறுசிறு கடன் தொல்லைகளைத் தீர்த்து விடுவீர்கள். குடும்பத்தோடு தொலை தூர ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். கலைஞர்கள் பெரிய நிறுவனத்தில் இருந்து வாய்ப்புகளைப் பெற முற்சிப்பார்கள். விருதுகள், பதவிகளுக்கு பெயர் பரிந்துரைக்கப்படும் நிலை உருவாகும்.

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, பதவி உயர்வு சம்பந்தமாகச் செய்த முயற்சிகள் பயனளிக்கக் கூடும். சக நண்பர்களின் வேலையையும் சேர்த்துச் செய்ய நேரிடலாம். சொந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கு அதிக ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் திருப்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் வருமானத்தை அதிகமாக்க பங்குதாரர்களுடன் கூடி ஆலோசனை நடத்துவீர்கள்.

பரிகாரம்: பார்வதி தேவிக்கு திங்கட்கிழமை வெண்மையான மலர்களால் மாலை சூட்டி, தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2,6,9
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்டக்கிழமை: திங்கள்


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை, பெண்கள் தங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்து விடுவார்கள். தாய் வீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பு, உறவினர் வருகையால் தீரும். பேச்சில் இனிமை கலந்து பேசுவது பிரச்சினைகளைத் தவிர்க்கும். கலைஞர்களின் வாய்ப்புகளுக்காக சகக்கலைஞர்கள் முயற்சி மேற்கொள்வார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள், விடுமுறையில் உள்ள சக பணியாளரின் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். சக ஊழியர்களின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், நவீனக் கருவிகளின் துணைகொண்டு வேலையை விரைவில் செய்து முடிப்பார்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் வழக்கம் போல நடைபெறும். வாடிக்கையாளர்களிடம் உள்ள பணத்தை வசூலிக்கத் தகுந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: ஞாயிறு


dhanusuதனுசு: குடும்பம் சிறு சிறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நடைபெறும். தொல்லைகளை சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சகக்கலைஞர் ஒருவருக்கு அவசியமான நேரத்தில் பண உதவி செய்ய நேரிடும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளிடம் சுமுகமாக நடந்து கொள்ளாவிட்டால் சிக்கல்கள் உருவாகலாம். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொந்தத்தொழிலில் புதிய நபர்களின் வருகையும், அவர்களால் பண வரவுகளும் ஏற்படும். வாக்குப்படி நடந்து கொள்ள முடியாமல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். கூட்டுத் தொழிலில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடைபெறாவிட்டாலும், வழக்கமான லாபம் குறையாது. பழைய கணக்கு வழக்குகளை சரிசெய்வீர்கள்.

பரிகாரம்: புத பகவானுக்கு புதன்கிழமைமலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு
செய்பவர்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்
: பச்சை
அதிர்ஷ்டக்கிழமை
: புதன்


magaramமகரம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். மகன் அல்லது மகளின் புதிய வேலையினால் குடும்ப வரவு அதிகமாகும். கலைஞர்கள் பிரபல நிறுவனத்தின் ஒப்பந்தங்களில் மகிழ்வுடன் பணியாற்றுவார்கள். வருமானமும், புகழும் அதிகமாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். சொந்தத் தொழிலில் பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபர் அறிமுகம் ஏற்படலாம். அவர் மூலம் வேலைகளும், வருமானமும் கிடைக்கும். கைகளில் பணப்புழக்கம் இருக்கும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். லாபம் அதிகமாகலாம். தொழில் வளர்ச்சியில் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, தீபமிட்டு வழிபாடு செய்தால் நன்மைகள் யாவும் நாடி வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி


kumbamகும்பம்: குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் ஏற்படலாம். புதிய கடன் பெற்று பழைய கடன்களை பைசல் செய்ய நேரிடும். பெண்கள் உறவினர் சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது சிறு மன வேறுபாடு தோன்றலாம். கலைஞர்கள், பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கினாலும், எதிர்பார்க்கும் வருமானம் இருக் காது. சகக்கலைஞர் மூலம் பெரிய நிறுவனங்களில் வாய்ப்பு பெற முயலுவீர்கள்.

உத்தியோகத்தில் வழக்கத்திற்கு மாறான வேலைப் பளுவால் அவதிப்படலாம். சக நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலைக்காரர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது நல்லது. சொந்தத்தொழிலில் வேலைகள் அதிகம் இருந்தாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது. மூலப் பொருட்கள் பற்றாக்குறையால் தொழிலில் முன்னேற்றம் தடைபடும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வழக்கமான லாபம் இருக்கும்.

பரிகாரம்: அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமை சிவப்பு மலர் மாலை அணிவித்து, நெய் தீபமிட்டு
வழிபாடு செய்தால் சகல நன்மைகளையும் அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: செவ்வாய்


meenamமீனம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். மாமன், மைத்துனர் உறவுகளில் பெண்களால் ஏற்பட்ட மனவேறுபாடுகள் பெரியோர்கள் தலையீடு காரணமாக முடிவுக்கு வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்றாலும், எதிர்பார்க்கும் ஆதாயம் இல்லாமல் போகலாம். கடின வேலைகளில் கவனம் அவசியம்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் விருப்பப்படி தள்ளி வைத்த வேலை ஒன்றை செய்து கொடுக்க நேரிடும். சொந்தத்தொழில் செய்பவர்கள் மனதில் தெம்பு, உற்சாகம் அதிகமாகும். புதிய நபர்களின் வேலைகளால் பணவரவு அதிகமாகும். கூட்டுத் தொழில் முயற்சியில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும் வழக்கமான லாபம் குறைபடாது. கூட்டாளிகளுடன் கூடி போட்டிகளை முறியடிக்க ஆலோசிப்பீர்கள்.

பரிகாரம்: குருபகவானுக்கு வியாழக்கிழமை மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை: வியாழன்