Home Astrology Weekly Rasi Palan வார ராசிபலன் – 28/11/2015 முதல் 04/12/2015 வரை

வார ராசிபலன் – 28/11/2015 முதல் 04/12/2015 வரை

462

mesaham

மேசம்: ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அவர் ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம் ஆகும். கணவர், மனைவிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். பன்னிரண்டில் கேது – தேவையற்ற பயம், விரக்தி ஏற்படலாம். ஆனால், கவலைப்படாதீர்கள். சீக்கிரத்தில் மனசு ஒரு நிலைக்கு வரும். எட்டில் சூரியன் – தந்தையுடன் உறவு நல்லபடியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஆறில் உள்ள சுக்கிரன் எதிர்பாலினத்தாரால் நன்மை ஏற்படுத்துவார்.

சிறப்புப் பரிகாரம்: சிவபெருமானுக்குப் பூஜைக்குரிய பொருட்களை உங்களின் சக்திக்கேற்ப வாங்கிக் கொடுத்து, ஈசனை தரிசனம் செய்வது மிகுந்த பலனளிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,6,9

அதிர்ஷ்ட நிறம்:– வெண்மை

அதிர்ஷ்டக்கிழமை:– திங்கள்


rishabam

ரிஷபம்: ஏழாம் வீட்டில் புதன் – கணவரின், மனைவி புத்திசாலித்தனத்தால் நன்மை விளையும். நான்காம் வீட்டில் குரு பகவான். தாயாரால் உங்களுக்கும், உங்களால் தாயாருக்கும் நன்மை ஏற்படும். வீடு வாங்கும் அல்லது விற்கும் எண்ணம் ஈடேறும்; அதில் நல்ல லாபம் காணலாம். பதினோராம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேதுவும் அந்த வீட்டைப் பார்க்கும் ராகுவும் வெளிநாட்டு உத்யோகம் கிடைக்கச் செய்வர். அல்லது உள்ளூரில் உள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

சிறப்புப் பரிகாரம்: விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலை சூட்டி, சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது வினைகளை அகற்றி வெற்றியை பெற்றுத் தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,2,5

அதிர்ஷ்ட நிறம்:– இளஞ்சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– ஞாயிறு


mithunam

மிதுனம்: ஒன்பதாம் வீட்டை குரு பார்ப்பதால் தந்தைக்கு முன்னேற்றமும் நன்மையும் இருக்கும். அவர் ஆரோக்யம் மேம்படும். பத்தாம் வீட்டை ராகு பார்க்கிறார் – வெளிநாட்டு உத்யோகம் கிட்டும். ராசிநாதன் புதன் உச்சமாக இருக்கிறார். புத்திசாலித்தனமும் சமயோசித அறிவாற்றலும் பளிச்சிடும். கல்வி அறிவும் பளிச்சிடும். நாலில் ராகு – தாயாருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.சனி ஏழாம் வீட்டில் – எதுவும் சற்று நிதானமாகத்தான் நிறைவேறும் .

சிறப்புப் பரிகாரம்: புத பகவானுக்கு புதன்கிழமை அன்று மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு, பச்சைப்பயறு சுண்டல் நிவேதனம் செய்து வழிபட்டால் பொன்னும், புகழும் வந்தடையும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,5,9

அதிர்ஷ்ட நிறம்:– இளம்பச்சை

அதிர்ஷ்டக்கிழமை:– புதன்


kadakam

கடகம்: மனதை ஒருநிலைப்படுத்த தியானம், யோகா பழகலாம். பேச்சைக் குறிக்கும் இரண்டாம் வீடு பலம் பெற்றிருப்பதால் சாதூர்ய பேச்சினால் மிகுந்த நன்மை விளையும். இரண்டாம் வீட்டு குரு பகவான் குடும்பத்தில் புதிய வரவோடு மகிழ்ச்சியையும் அனுப்பி வைப்பர். வாக்கினிலே இனிமை அமையும். ராசி நாதன் சந்திரன் பன்னிரண்டாம் வீட்டுக்கு வருவதால் வீண் குழப்பங்கள் ஏற்படாமல் மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ளுங்கள்.

சிறப்புப் பரிகாரம்: ஸ்ரீதுர்க்கா தேவிக்கு வெள்ளிக்கிழமை வாசனை மலர் மாலையிட்டு, நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்வது துன்பத்தைப் போக்கி இன்பத்தை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,9

அதிர்ஷ்ட நிறம்:– இளஞ்சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– செவ்வாய்


simam

சிம்மம்: குழந்தைகளைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டுக்கும் குரு பார்வை – குழந்தைகளைப் பற்றிய பயம் நீங்கும். குழந்தைப் பேறு கிட்டாதோருக்கு அந்த பாக்கியம் ஏற்படும். பூர்வ புண்ணியத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பல காலமாக நிறைவேறாத பிரார்த்தனைகளை எளிதாய் முடிப்பீர்கள். ஏழாம் வீட்டுக்கு குரு பார்வை -திருமணமாகாமல் தவித்தவர்களுக்குத் திருமணமாகும். செளபாக்கிய வீடாகிய ஒன்பதாம் வீட்டுக்கும் குரு பார்வை – திடீர் அதிருஷ்டம் வரும்.

சிறப்புப் பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் செல்வமும், வீரமும் அளிக்கும். சிந்தனை வளம் பெருகும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,5,9

அதிர்ஷ்ட நிறம்:– இளஞ்சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– ஞாயிறு


kanni

கன்னி: ராசி நாதனாகிய புதன் மூன்றில் இருந்துகொண்டு உங்களை புத்திசாலித்தனமாக சிந்திக்கவும், செயல்படவும் வைப்பார். மூன்றில் சனி – மிகுந்த நன்மைகளை அளிப்பார். சகோதரர்களுக்கு ஏதேனும் சிரமம் என்றால் ஓடிப்போய் உதவுங்கள். நான்காம் வீட்டை குரு பார்ப்பதால் தாயாருக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பன்னிரண்டில் குரு – சுப நிகழ்ச்சிகளுக்கு, ஆடை அணிமணிகளுக்கு அதிக செலவாகும். ராசியின் மீது செவ்வாய் இருப்பதால் கோபம் ஏற்படலாம், கட்டுப்படுத்திக்கொள்ளப் பாருங்கள்.

சிறப்புப் பரிகாரம்: குரு பகவானுக்கு வியாழக்கிழமை சுண்டல் கடலை மாலை அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் தொட்ட காரியம் வெற்றியாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,5,9

அதிர்ஷ்ட நிறம்:– வெளிர்மஞ்சள்

அதிர்ஷ்டக்கிழமை:– வியாழன்


thulam

துலாம்: ஒன்பதாம் வீட்டிலுள்ள குரு பகவான் எல்லா வகைகளிலும் நன்மை செய்வார். இரண்டில் சூரியன் – அரசாங்க செலவுகள் ஏற்படும்; அதே சமயம் அதனால் மிகுந்த நன்மையும் லாபமும் ஏற்படும். இரண்டில் புதன் – படிப்புச் செலவை ஏற்படுத்துவார், அந்த புதன் உச்சமாக இருப்பதால், அதனால் சிறந்த பலன் இருக்கும். இரண்டில் சனி. அதாவது, ஏழரைச் சனி இன்னும் சிறிது மிச்சம் இருப்பதால், பேச்சிலும் உத்யோகத்திலும் சற்று கவனமாக இருங்கள்.

சிறப்புப் பரிகாரம்:  சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபமிட்டு, எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபாடு செய்தால் சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷம் நிலைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,8,9

அதிர்ஷ்ட நிறம்:– கருநீலம்

அதிர்ஷ்டக்கிழமை:– சனி


viruchigam

விருச்சிகம்: ஐந்தில் கேது – குழந்தைகள் பற்றி சிறு மனக்கவலைகள் ஏற்படுத்துவார். எனினும் அவர் ஞானகாரகன் என்பதால் குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு தங்கள் பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். ராசிநாதன் சந்திரன் மூன்றில் – வேண்டாத பயம், குழப்பம், வீண் கற்பனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது வார ஆரம்ப நிலை மட்டுமே. பிறகு எல்லாம் சரியாகிவிடும்.

சந்திராஷ்டமம்: 27.11.2015 வெள்ளி முதல் 29.11.2015 ஞாயிறு வரை.

சிறப்புப் பரிகாரம்: ஆஞ்சநேய சுவாமிக்கு சனிக்கிழமை
வெற்றிலை மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு
வழிபாடு செய்வது தைரியமும், சொல் வன்மையும் சேர்க்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,6,8

அதிர்ஷ்ட நிறம்:– வெளிர் நீலம்

அதிர்ஷ்டக்கிழமை:– சனி


dhanusu

தனுசு: மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால் சகோதரர்களுக்கு உங்களாலும் உங்களுக்கு அவர்களாலும் நன்மையும் லாபமும் ஏற்படும். பன்னிரண்டில் சனி – பயணங்கள் தடை, தாமதத்துக்குப் பிறகுதான் நடக்கும். என்றாலும் வெற்றிகரமாக முடியும். ராசியை குரு பார்ப்பதால் எங்கும் வெற்றி… எதிலும் வெற்றிதான். ஒன்பதில் குரு – தந்தைக்கு லாபங்கள், தந்தையால் லாபங்கள் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: 29.11.2015 ஞாயிறு முதல் 2.12.2015 புதன் வரை.

சிறப்புப் பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை வில்வ மாலை சூட்டி, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்வது பொருளும், புகழும் தந்து புதுவாழ்வைத் தோற்றுவிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,5,9

அதிர்ஷ்ட நிறம்:– வெளிர்மஞ்சள்

அதிர்ஷ்டக்கிழமை:– திங்கள்


magaram

மகரம்: குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் வளமும் நிலவும். பேச்சினால் நன்மையும் லாபமும் வரும். வங்கி இருப்பு கூடும். குரு பகவான் எட்டாம் வீட்டில் இருந்தாலும் அவர் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். அலுவலகத்தில் வைக்கும் கோரிக்கைகள் நல்ல முறையில் பலன் தரும்.

சந்திராஷ்டமம்: 2.12.2015 புதன் முதல் 4.12.2015 வெள்ளி வரை.

சிறப்புப் பரிகாரம்: சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து, நெய்தீபம் போட்டு வலம்வந்து வழிபாடு செய்வது செல்வமும், புகழும் தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,5,9

அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– ஞாயிறு


kumbam

கும்பம்: ஒன்பதாம் வீட்டில் சனி – தந்தையின் உத்யோகத்தில் மந்த நிலை இருக்கும். எனினும் சூரியன் நல்ல நிலையில் இருப்பதால் அவை சுமுகமாக சரியாகும். ராசியைப் பார்க்கிறார் ராகு. திடீரென்று வெளிநாடு கிளம்பும்படி நேரலாம். ஆறில் உள்ள குரு, அருமையான நண்பர்களை அளிப்பார். அவர்களால் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும். ராகு ராசியைப் பார்ப்பதால் கோபத்தைத் தூண்டும் சம்பவங்களில் அமைதியாக இருப்பது நல்லது.

சிறப்புப் பரிகாரம்: துர்க்காதேவிக்கு வெள்ளிக்கிழமை அரளிப்பூ மாலை அணிவித்து, நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்வது நல்ல பலன்களை அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,6,9

அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– வெள்ளி


meenam

மீனம்: ராசிக்குரிய குரு ஆறாம் வீட்டில் இருப்பதால் நண்பர்கள் நன்மை செய்வார்கள். எனினும் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ராசியிலுள்ள கேது சில சமயங்களில் ஆரோக்யக் குறைவை உண்டாக்கலாம்; எனினும் ராசிநாதன் குரு என்பதால் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. பன்னிரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் சுப செலவுகள் ஏற்படும். மனதில் தீய எண்ணங்களும் முறையற்ற விருப்பங்களும் அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிறப்புப் பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்வது நல்ல பலன் அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,5,9

அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– செவ்வாய்