Home Astrology Weekly Rasi Palan வார ராசிபலன் – 5–12–2015 முதல் 10–12–2015 வரை

வார ராசிபலன் – 5–12–2015 முதல் 10–12–2015 வரை

279

mesahamமேசம்: குடும்பத்தில் கணவன்– மனைவி அன்பு சீராக இருக்கும். பணத்தட்டுப்பாடு காரணமாக சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். பெண்கள், தங்கள் பணிகளில் கவனமாக இருந்தால் மட்டுமே அன்றாட சிரமங்களைத் தவிர்க்க முடியும். கலைஞர்களுக்கு, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சகக்கலைஞர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பிரபல நிறுவனங்களில் இருந்து ஒப்பந்தங்களைப் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பணிகளில் கவனமாக நடந்து கொள்வது அவசியம். சகப்பணியாளர்களிடம் கொடுக்கல்– வாங்கல் செய்வது நட்பை பாதிக்கலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாய்ப்புகள் உருவாகும். வாடிக்கையாளர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது நன்மை அளிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களால் வியாபாரம் நன்றாக நடைபெற்று பண வரவு அதிகரிக்கும். தொழில் போட்டிகளை சமாளித்து விடுவீர்கள்.

சந்திராஷ்டமம்: புதன் மாலை 5.30 மணி முதல் வியாழக்கிழமை வரை

சிறப்புப் பரிகாரம்: சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமையில், சிவப்பு வண்ண மலர்களால் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: ஞாயிறு


rishabamரிஷபம்: குடும்பத்தில், எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஏற்படலாம். வேலைக்குப் போகும் பெண்கள், சக பணியாளர்களுடன் சுமுகமாகப் பழகுவது நல்லது. சிக்கனமாக இருந்து செலவுகளை குறைக்க முயற்சிப்பீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது. நலிவடைந்த சகக்கலைஞர் ஒருவருக்கு தக்க சமயத்தில் பொருளுதவி செய்யும் நிலை ஏற்படும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, புதிய பதவிகள் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். சிலருக்கு, எதிர்பார்க்கும் இனங் கள் கிடைத்து, பாதியில் நிறுத்தியிருக்கும் பணிகளைத் தொடருவார்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர் களின் அவசரத்தை உணர்ந்து பணிகளை விரைவாகச் செய்து கொடுப்பார்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பு திருப்தி தருவதாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த புதிய முறைகளைக் கையாளுவீர்கள்.

சிறப்புப் பரிகாரம்: சுதர்சன பகவானுக்கு புதன்கிழமை அன்று துளசிமாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை
அதிர்ஷ்டக்கிழமை: புதன்


mithunamமிதுனம்: குடும்பத்தில், எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஏற்படலாம். வேலைக்குப் போகும் பெண்கள், சக பணியாளர்களுடன் சுமுகமாகப் பழகுவது நல்லது. சிக்கனமாக இருந்து செலவுகளை குறைக்க முயற்சிப்பீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது. நலிவடைந்த சகக்கலைஞர் ஒருவருக்கு தக்க சமயத்தில் பொருளுதவி செய்யும் நிலை ஏற்படும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, புதிய பதவிகள் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். சிலருக்கு, எதிர்பார்க்கும் இனங் கள் கிடைத்து, பாதியில் நிறுத்தியிருக்கும் பணிகளைத் தொடருவார்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர் களின் அவசரத்தை உணர்ந்து பணிகளை விரைவாகச் செய்து கொடுப்பார்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பு திருப்தி தருவதாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த புதிய முறைகளைக் கையாளுவீர்கள்.

சிறப்புப் பரிகாரம்: சுதர்சன பகவானுக்கு புதன்கிழமை அன்று துளசிமாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை
அதிர்ஷ்டக்கிழமை: புதன்


kadakamகடகம்: குடும்பத்தில், விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். செலவுகளைச் சமாளிக்க உறவினர்களின் உதவி தேவைப் படும். பெண்களுக்கு அதிக வேலைப்பளுவால் ஆரோக்கியக் குறை ஏற்படலாம். கலைஞர்களுக்கு, பழைய ஒப்பந்தங்களிலேயே தேவையான பொருள் வரவு கிடைக்கும். சகக்கலைஞர்கள், உங்கள் பணிகளில் தேவையான ஒத்துழைப்பு அளிப்பார்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் விருப்பப்படி அவசியமான வேலையொன்றை விரைவாகச் செய்துகொடுத்துப் பாராட்டு பெறுவார்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்களால் வேலைப்பளு அதிகரிக்கும். பணிகளை விரைந்து முடித்துக் கொடுப்பதற்காக ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழிலில் வியாபார வளர்ச்சி ஏற்பட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பங்குதாரர்களின் அனுகூலத்தால் முதலீடுகள் அதிகமாகும்.

சிறப்புப் பரிகாரம்: கந்தனுக்கு செவ்வாய்க்கிழமை
சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் வெற்றியாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி


simamசிம்மம்: குடும்பத்தில் சிலருக்கு, தற்போது வசிக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். சிலர் புதிய வீடுகட்டி குடிபோகலாம். பெண்கள் தாய்வீடு சென்று மங்கலப் பொருள்களுடன் திரும்புவார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். ஆர்வ மிகுதியால் கடினமான பணிகளில் ஈடுபட்டு, சிறு விபத்துகளை அடைய நேரலாம். சகக்கலைஞர்கள் சிலருக்கு உதவுவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, விருப்ப ஓய்வு கிடைக்க வாய்ப்புண்டு. உயரதிகாரிகளிடம் பொறுமையாக நடந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகள் வந்து சேரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், பழைய வாடிக்கையாளர் மூலம் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடும். அவசரமாகவும், பரபரப்பாகவும் பணிகளில் ஈடுபடுவதால் ஓய்வு நேரம் குறையலாம். கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காமல் போகலாம். தொழில் போட்டிகளை சமாளிப்பது பற்றி பங்குதாரர்களோடு பேசி முடிவு எடுப்பீர்கள்.

சிறப்புப் பரிகாரம்: லட்சுமி ஹயக்ரீவருக்கு வியாழன் அன்று துளசிமாலை சூட்டி, நெய்தீபமிட்டு வழிபட்டால் சிந்தனை சிறப்படைந்து, செல்வ வளம் பெருகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை: செவ்வாய்


kanniகன்னி: குடும்பத்தில் மகிழ்வான சூழ்நிலை காணப்படும். சிறுசிறு தொல்லைகள் இருந்தாலும், பாதிப்புகள் ஏற்படாது. பெண்கள், சகோதர வழி உறவுகளின் இல்ல நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் பெற்று பணிகளில் ஆர்வமுடன் பணியாற்றுவர். பண வசதிகளும், புகழும் ஏற்படும். சகக்கலைஞர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். கிடைக்க வேண்டிய பணவரவுகளைப் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்கள் மூலம் அதிக பணிகள் வந்து சேரும். அவைகளை விரைவாகச் செய்ய முற்படுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, வியாபாரத்தில் அதிக லாபம் ஏற் படலாம். பங்குதாரர்களுக்குச் சேர வேண்டியதை பிரித்துக் கொடுப்பீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு பலன் தரும்.

சிறப்புப் பரிகாரம்: ஆஞ்சநேய சுவாமிக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சூட்டி, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வினைகள் அகன்று வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,8,9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை: சனி


thulamதுலாம்: குடும்பத்தில் விருந்தினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படலாம். மங்கல நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கு கொண்டு மங்கலப் பொருட்கள் பெறக்கூடும். கலைஞர்கள், தங்கள் பணிகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள். புதிய ஒப்பந்த நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். உணவுக் கட்டுப்பாட்டில் கவனமின்றி ஆரோக்கியக்குறையைச் சந்திக்க நேரலாம்.

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, முயற்சிகள் மூலம் எதிர்பார்க்கும் காரியம் வெற்றியளிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுடன் முக்கிய வேலையை செய்து பலன் பெறுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபரின் அறிமுகமும், தொழில் முன்னேற்றமும் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று, லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஆலோசனைப்படி வியாபார ஸ்தலத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள்.

சிறப்புப் பரிகாரம்: சனிபகவானுக்கு சனிக்கிழமையில் கருநீல மலர் மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,6,8
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்
அதிர்ஷ்டக்கிழமை: சனி


viruchigamவிருச்சிகம்: குடும்பம் சீராக நடைபெற்றாலும் சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கலாம். பெண்கள் சாமர்த்தியத்தால் அவைகளைச் சமாளிப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்குப் பணவரவுகள் இருக்கும். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் மூலம் புதிய ஒப்பந்தங்கள் பெற முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடினமான பணிகளில் நேரடியாகக் கலந்து கொள்வதைத் தவிர்ப்பது அவசியம்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் எண்ணப்படி, நிறுத்தி வைத்த வேலை ஒன்றை உடனடியாக செய்யும் நிலை ஏற்படும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், அவசர வேலை ஒன்றை ஓய்வின்றி செய்து கொடுத்துப் பாராட்டுப் பெறுவார்கள். எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம் கிடைத்து மகிழ்ச்சி அடையலாம். கூட்டு வியாபாரம், அதிக லாபம் தரக்கூடும். வியாபார அபிவிருத்தி பற்றி பங்குதாரர்களிடம் ஆலோசிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

சிறப்புப் பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு வியாழன் அன்று வில்வ மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள்
அதிர்ஷ்டக்கிழமை: வியாழன்


dhanusu

தனுசு: குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றி, புதிய நவீனமான பொருட்களை வாங்கிப் பொலிவூட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகையால் பெண்களுக்கு குடும்பவேலைகள் அதிகமாகலாம். கலைஞர்கள் சகக்கலைஞர்கள் மூலம் புதிய வாய்ப்பு களைப் பெற்று ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். பணவசதிகளால் நூதனமான பொருள்கள் இல்லத்தை அலங்கரிக்கும்.

உத்தியோகத்தில் மகிழ்வான சூழ்நிலை காணப்படும். உயரதிகாரிகளின் ஆதரவோடு அலுவலகத்தில் சில சலுகை களைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்க்கும் இனங்கள் சாதகமாக அமையும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பும், பணவரவும் உண்டாகும். ஓய்வின்றி செயல்பட்டு குறித்த காலத்தில் பணிகளை முடிப்பீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய கிளைகள் தொடங்குவது பற்றி பங்குதாரர்களுடன் ஆலோசிப்பீர்கள்.

சிறப்புப் பரிகாரம்: முருகனுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி, நெய்தீபமிட்டு
வழிபட்டால் தீவினை அகன்று செல்வம் தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1,3,6
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: ஞாயிறு


magaramமகரம்: குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்பட்டாலும் சிறு சிறு தொல்லைகளும் ஏற்படக்கூடும். பெண்கள் பணியாற்றும்போது கவனமாக இல்லாவிட்டால் சிறு விபத்துகளைச் சந்திக்க நேரிடும். கலைஞர்கள், பணிகளில், உற்சாகம் காட்டினாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இல்லாமல் போகக்கூடும். உணவுக்கட்டுப்பாடு குறைவினால் ஆரோக்கியக்குறை ஏற்படலாம்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். எதிர்பார்த்த இனங்கள் தள்ளிப் போகும். அவசர வேலைகளால் ஓய்வுநேரம் குறைந்து அல்லல்பட நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அதிக வேலைகள் இருந்தாலும், வருமானம் கைகளுக்கு வருவதில் தாமதமாகலாம். அவசரப் பணிகளால் காலம் பார்க்காமல் உழைக்க நேரிடும். கூட்டு வியாபாரத்தில் போட்டிகளால் மனச்சஞ்சலம் ஏற்படலாம். பங்குதாரர்களோடு போட்டிகளை முறியடிக்கத் திட்டம் தீட்டக் கூடும்.

சந்திராஷ்டமம்: வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி வரை

சிறப்புப் பரிகாரம்: லட்சுமிதேவிக்கு வெள்ளிக்கிழமை
செந்தாமரை மலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு
வழிபாடு செய்தால் வளர் செல்வம் தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டக்கிழமை: வெள்ளி


kumbamகும்பம்: குடும்பத்தில் மகிழ்வான போக்கு காணப்படும். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்வளிக்கும். மங்கல நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெற பெண்கள் முயற்சிகளை மேற்கொள்வார்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்களின் மூலம், வாய்ப்புகளும், வசதிகளும் அடைவார்கள். சகக்கலைஞர்களின் குடும்பத்து நிகழ்ச்சிக்கு உதவும் சூழ்நிலை ஏற்படக் கூடும்.

உத்தியோகஸ்தர்கள், அவசியமான வேலையை, உயரதிகாரி களின் விருப்பப்படி செய்து கொடுத்துப் பாராட்டுப்பெறுவார்கள். சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பணம் கைகளுக்கு வந்து சேரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் வேலைகள் வந்து சேரும். செய்யும் பணிகளுக்கு எதிர்பார்க்கும் வருமானம் கிடைத்து மகிழ்வேற்படலாம். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளோடு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.

சந்திராஷ்டமம்: வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணி முதல் சனி மற்றும் ஞாயிறு வரை

சிறப்புப் பரிகாரம்: லட்சுமி நரசிம்மருக்கு புதன்கிழமை துளசிமாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு
செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் வெற்றியாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை
அதிர்ஷ்டக்கிழமை: புதன்


meenamமீனம்: குடும்பம் சிறுசிறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சகோதர வழி உறவுகளின் இல்லங்களுக்குச் சென்ற பெண்களுக்கு வீண் பேச்சுக்களால் மனக்கசப்பு ஏற்படலாம். கலைஞர்கள் பழைய வாய்ப்புகளிலேயே தேவையான வருமானம் பெறக்கூடும். சகக்கலைஞர்கள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெற முயற்சிகளை மேற்கொள்ளநேரலாம்.

உத்தியோகஸ்தர்கள், தங்கள் கடமைகளில் கவனமாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சொந்தத்தொழில் செய்பவர்கள், பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். வேலைகளை அவசரமாக செய்ய வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில் சுமாரான வியாபாரம் இருந்தாலும், வழக்கமான லாபம் கிடைக்கும். பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

சந்திராஷ்டமம்: திங்கள், செவ்வாய் மற்றும் புதன் மாலை 5.30 மணி வரை

சிறப்புப் பரிகாரம்: துர்க்கைதேவிக்கு திங்கட்கிழமைமலர் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்து
வந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2,3,6
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்டக்கிழமை: திங்கள்