Home Astrology Weekly Rasi Palan வார ராசிபலன் – 7/11/2015 முதல் 13/11/2015 வரை

வார ராசிபலன் – 7/11/2015 முதல் 13/11/2015 வரை

604

mesaham

மேசம்: பன்னிரண்டில் கேது இருப்பதால் தேவையற்ற பயமோ வேண்டாத விரக்தியோ வரலாம் அதிலிருந்து ஒதுக்கி விடுங்கள். எட்டில் சனி என்பதால் வாகனங்களைக் கவனமாக ஓட்டுங்கள். ஐந்தில் குருவானது குழந்தைகளுக்கு மங்களகரமான விஷயங்கள் நிறைவேறும். படிப்பில் வெற்றி பெற்று பரிசுகளும் பதக்கங்களும் வாங்கி, தாங்களும் பெருமைப்பட்டு உங்களையும் பெருமைப்படுத்துவார்கள். கோயில்களுக்கும் பெரியோர்களையும் தரிசிக்க போவீர்கள். நாலிலுள்ள சுக்கிரன் உங்களுக்கென்று அழகிய வீடு வாங்க வைப்பார்.

பரிகாரம்: வியாழக்கிழமை கோயிலுக்கு சென்று இல்லாதவர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்யுங்கள். அவர்களின் மூலம் கடவுளின் ஆசியைப் பெறுங்கள்.

சந்திராஷ்டமம்: 12.11.2015 வியாழக்கிழமை முதல் 14.11.2015 சனிக்கிழமை வரை.


rishabam

ரிஷபம்: ஐந்தில் புதன் என்பதால் குழந்தைகளின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டு அவர்களுக்கு நன்மையும் பாராட்டும் கிடைக்கும். ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் குழந்தைகள் காதல் திருமணத்திற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிப்பீர்கள். நாலில் சுக்கிரன். அழகிய வீடு வாங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. தாயாரால் நன்மை உண்டு. உங்கள் தாயார் வீடு வாங்கவும் வாய்ப்புள்ளது. நீங்கள் புதிய பயிற்சி வகுப்புகளில் சேரக்கூடும். உங்களின் திறமைகளை உணர்வீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் நவகிரகங்களை சுற்றி வழிபடுங்கள். அன்று ஏழைகளுக்கு உணவு ஏதாவது கொடுத்து உதவுங்கள்.


mithunam

மிதுனம்: ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடிவரும். அவர் உங்களது ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம் யோகம் உண்டு. பத்தாம் வீட்டைப் பார்க்கும் ராகு வெளிநாட்டு உத்யோகம் கிடைக்க வழிவகை செய்வார். உள்ளூரில் உள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் நீங்கள் என்றால் உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு பதவியும் சம்பளமும் உயரும். பல காரணங்களுக்காக வெளியூர் வெளிநாடு என்று பயணங்கள் போக வாய்ப்பு உள்ளது. தம்பதியருக்கு அதிர்ஷ்ட அனுகூலம் கிட்டும்.

பரிகாரம்: புதன்கிழமையில் துளசி மாலையை விஷ்ணு பகவானுக்கு அளியுங்கள். கோயிலுக்கு சங்கு வாங்கித் தரலாம்.


kadakam

கடகம்: உங்கள் பேச்சினால் பிரிந்த குடும்பங்களையும் ஒட்ட வைக்கும் நல்ல நிகல்வுகலும் ஏற்படும். நான்காம் வீட்டில் கிரகக் கூட்டம் இருப்பதால் வாகன யோகம் இருக்கும். பலவகைக் கல்வி பயில்வீர்கள். இரண்டில் சுக்கிரன் இருப்பதால் உங்களின் பேச்சு கவர்ச்சிகரமாக இருக்கும். இதே காரணத்தினால் பிரிந்த குடும்பத்தினர் ஒன்று கூடுவீர்கள். அலுவலக விவகாரங்களில் உங்கள் பேச்சு எடுபடும், செல்வாக்கு உயரும். உங்களுக்கு வாக்கினிலே இனிமை கூடும். அதேசமயம், பேச்சைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் கடினமான சொற்களைக் கையாளாதீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகரை வணங்குங்கள். முருகர் கோயிலிலோ நவகிரக சந்நதியிலோ விளக்கேற்றுங்கள்.


simam

சிம்மம்: குடும்பத்தினரின் செல்வாக்கும் புகழும் பெருமையும் அதிகரிக்கும். இரண்டில் புதன் இருப்பதால் பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். இதனால் அலுவலகத்திலும் சொந்த வாழ்க்கையிலும் வெற்றி கிடைக்கும். இரண்டாம் வீட்டில் சுக்கிரன். உங்களுக்காகவோ, வீட்டில் உள்ளவர் களுக்காகவோ நகைகளோ, துணிமணிகளோ, அலங்காரப் பொருட்களோ வாங்குவீர்கள். ஏழாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணமாகும். ஒன்பதில் குரு பார்வை இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் வரும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும்.

பரிகாரம்: செவ்வாயில் துர்க்கையை ராகு காலத்தில் வணங்கி சனியன்று விநாயகரைத் தொழுது வணங்குங்கள்.


kanni

கன்னி: புதிய வீடு வாங்குவீர்கள். வீடு வாங்குவது அல்லது விற்பதில் நல்ல லாபம் வரும். ஆறாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் நல்ல நண்பர்கள் மிகுந்த நன்மை செய்வார்கள். கடனுக்காக மனு செய்திருந்தால் உடனே கிடைக்கும். உங்கள் ராசியின் மீதே சுக்கிரன். இதனால் உங்கள் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். உங்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் நகைகளோ, துணிமணிகளோ, அலங்காரப் பொருட்களோ வாங்க நிறைய செலவு செய்வீர்கள். நான்காம் வீட்டில் குரு பார்வை இருப்பதால் தாயாருக்கு முன்னேற்றங்களும் லாபங்களும் கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் மகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகங்களை சொல்லுங்கள், நன்மையே நடக்கும்.


thulam

துலாம்: எந்த காரியத்திலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பன்னிரண்டில் உள்ள கிரகக்கூட்டம் காரணமாக நீங்கள் நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். எனினும் அவை நல்ல செலவுகளாகவே இருக்கும். புதன் இருப்பதால் கல்வி செலவுகள்தான் பொதுவாக அதிகமாக இருக்கும். சூரியன் இருப்பதால் தந்தையுடன் நல்லுறவு பாதிக்காமல் பார்த்துக் கொள்வதுடன் அவரின் ஆரோக்யத்தை நன்கு பாதுகாக்க வேண்டும். இதே வீட்டில் ராகு இருப்பதால் வெளிநாடு வெளியூர் சம்பந்தமான செலவுகள் இருக்கும். அவையும் நன்மையும் நிம்மதியும் அளிக்கும். லாபத்தைக் குறிக்கும் பதினொன்றாம் வீட்டில் உள்ள குருவால் பணவரவு அதிகரிக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் கோதுமையால் செய்த இனிப்பை ஏழைகளுக்குக் கொடுங்கள். ஞாயிறன்று சூரியனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


viruchigam

விருச்சிகம்: நான்காம் வீட்டுக்கு குரு பார்வை கிடைப்பதால் வாகனம் வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக நாட்டம் ஏற்பட்டு முன்னேற்றம் அடைவார்கள். சற்று தாமதமாக ஆனால், அருமையான பலன் கிடைக்கும். பன்னிரண்டில் இருக்கும் சூரியன் பலவீனமாக இருப்பதால் அரசாங்க உத்யோகம் எளிதாய் கிடைக்கும். பதினொன்றில் உள்ள புதன் உங்களை மிகவும் உயர்த்துவார். பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் இந்த ராசி மருத்துவர்களுக்கு நல்ல காலம் ஏற்படும். அதே வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் திடீர் மாற்றல்கள் ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் வாகன ஓட்டுனர்களுக்கு உணவு கொடுங்கள். சனியன்று நவகிரகம் மற்றும் அனுமனை வணங்கினால் நல்லது.


dhanusu

தனுசு: ஒன்பதில் சுக்கிரன் என்பதால் கலைத் துறையினர் அதிக லாபம் பார்ப்பீர்கள். ஒன்பதாம் வீட்டில் செவ்வாய். இந்த ராசி மருத்துவர்களுக்கு நல்ல காலம் ஏற்படும். அதே வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் எதிர்பாராத வகையில் மாற்றல்கள் ஏற்படும். குரு பகவான் மிகவும் சாதகமாக இருக்கிறார். அவர் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் ஒன்பதாம் வீட்டில் இருப்பதுடன் அவர் தன் சொந்த வீட்டையே பார்க்கிறார். எனவே நன்மையும் லாபமும் பெருகும். இன்னும் ஏழரைச் சனி முடியவில்லை என்பதால் நீங்கள் நிதானம் இழக்காதவரை உங்களுக்குப் பிரச்னை கிடையவே கிடையாது.

பரிகாரம்: முருகரை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமைகளில் ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்.


magaram

மகரம்: பேச்சினால் நன்மையும் லாபமும் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பேச்சுகள் நல்ல முறையில் நன்மை தரும். இரண்டை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும், வளமும் நிலவும். குரு பகவான் எட்டாம் வீட்டில் இருக்கிறார். அது ஆரோக்யத்தைக் குறிக்கும் வீடாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். அவர் பார்க்கும் வீடுகள் நன்மை அளிப்பவையாக உள்ளன. இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பம் விரிவடைந்து சுபிட்சம் ஏற்படும்.

பரிகாரம்: வியாழக்கிழமை கருப்புக் கொண்டைக்கடலையை கோயிலில் கொடுங்கள். நெய்விளக்கேற்றுங்கள்.


kumbam

கும்பம்: இலாபத்தைக் குறிக்கும் பதினோறாம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். திடீரென்று பணவரவு அதிகரிக்கும். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எட்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் அருமையான நன்மைகள் உண்டாகும். எதிர்பாலின நண்பர்கள் நிறைய நன்மை செய்வார்கள். இதே காரணத்தினால் திருமணமாகாதவர்களுக்கு மனதுக்குப் பிடித்தவர்களுடன் திருமணம் நடக்கும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் மாணவர்களுக்குக் கல்விக்கு உதவும் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுங்கள்.

சந்திராஷ்டமம்: 7.11.2015 சனிக்கிழமை முதல் 9.11.2015 திங்கட்கிழமை வரை.


meenam

மீனம்: சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். ஏழாம் வீட்டில் செவ்வாய் இருப்பதாலும் அவர் உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் அநாவசியக் கோபம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; யாரையும் கோபமூட்டும் வகையிலும் பேசாதீர்கள், நடந்துகொள்ளாதீர்கள். ஆறாம் இடத்தில் உள்ள குரு அருமையான நண்பர்களை அளிப்பார். அவர் உங்கள் பத்தாம் வீடாகிய உத்யோக ஸ்தானத்தைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் நவகிரக சந்நதியிலுள்ள ராகு-கேதுவை விளக்கேற்றி வழிபடுங்கள்.

சந்திராஷ்டமம்: 9.11.2015 திங்கட்கிழமை முதல் 12.11.2015 வியாழக்கிழமை வரை.