Home Tamil Cinema News நடிகை அனுஷ்கா சர்மா கோலியுடன் திருமணமா..?

நடிகை அனுஷ்கா சர்மா கோலியுடன் திருமணமா..?

59

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட்டின் 3 நிலை அணிகளிலும் கேப்டனாக இருப்பவருமான வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த படங்களை அவர்களே வெளியிட்டு இருந்தனர். தொடக்கத்தில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.

இந்த நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடக்கிறது. இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள் கிறார்கள்.
திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

ஆனால் இருவரும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அனுஷ்கா சர்மா என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் இது போன்ற வதந்தி சுற்றி வருகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here