Home Tamil Breaking News கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவத்தின் எதிரொலி..

கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவத்தின் எதிரொலி..

65
SHARE

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உள்ளனர். தீக்குளித்தவர்களில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையையும் எழ செய்து உள்ளது. கந்து வட்டி கும்பலுக்கு எதிராக கடும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் தி.மு.க நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, நெல்லை மாவட்டத்தில் நிலவிவரும் கந்துவட்டிக் கொடுமை குறித்து ஆட்சியரிடம் விளக்கிக் கூறினர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கந்து வட்டிக் கொடுமை மீண்டும் தலைதூக்கி இருப்பதால், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மக்கள் அளிக்கும் மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்ட மனுவையும் ஆட்சியரிடம் அளித்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here