Home Tamil Cinema News பெரும் எதிர்பார்ப்பில் “விசாரணை” படம்

பெரும் எதிர்பார்ப்பில் “விசாரணை” படம்

112

Visaranai

அட்டகத்தி தினேஷ் நடித்து இயக்குனர் வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ள படம் “விசாரணை”. இதில் கயல் ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கின்றனர்.

காவல்துறையினர் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை மறைக்கும் நோக்கில் செயல்படும் பொழுது, அதில் சாமான்ய மக்கள் மாட்டிக்கோண்டு வதைபடுவதையும், செய்யாத தவறுக்காக உயிரிலப்பதையும், இதன் தாக்கத்தால் ஒரு மனிதன் சமுதாயத்தை எதிர்த்து எவ்வாறு போராட துவங்குகிறான் என்பதையும் சமுதாய நோக்கோடு சொல்லியிருக்கும் படம் விசாரணை.

இந்த படத்திற்கு எஸ்.ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்து ஜி.வி.பிரகாஸ் இசையமைத்துள்ளார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தனுஷின் வொண்டர் பார் ப்லிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்தப்படம் தயாரித்து முடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகினாலும், சர்வேதேச அளவில் பல திரைப்பட நிகழ்ச்சிகளில் திரையிடப்படதால் தமிழகத்தில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வகையில் பாராட்டு பெற்றதால் தமிழகத்தில் இந்தப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிகொண்டே வருகிறது. இந்த நிலையில் வருகின்ற ஜனவரி 29ம் தேதி வசாரணை திரைப்படம் வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.