Home Tamil Cinema News இந்தி நடிகரை காதலிக்கும் யாமி கவுதம்

இந்தி நடிகரை காதலிக்கும் யாமி கவுதம்

84

pulkit-samrat-and-yami-gautam

இளம் பாலிவுட் ஹீரோ புல்கிட் சாம்ராட்வுடன் யாமி நெருக்கம் காட்டி வருகிறார். சமீபகாலமாக அவருடன் ஜோடியாக பார்ட்டி, பீச் என்று சுற்றி திரிந்து டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.

தமிழில் ராதாமோகன் இயக்கிய ‘கவுரவம்’ படத்தில் நடித்தவர் யாமி கவுதம். தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் இந்தியில் நடித்து வருகிறார். படங்களில் இவர் பிரபலம் ஆனதைவிட அழகு கிரீம் விளம்பரம் மூலம்தான் பாப்புலர். இந்தியில் ஹீரோயின்களிடையே நிலவும் கடும்போட்டி யாமியை முன்னேற விடாமல் தடுத்திருக்கிறது.

கவர்ச்சியாகவும் நடிக்கத் தயார் என்று கூறி கவர்ச்சி படங்களும் வெளியிட்டார், பலன் இல்லை. பாலிவுட் பாணியில் பாய்பிரண்டுடன் சுற்றும் புதுபாணியை தற்போது கையிலெடுத்திருக்கிறார்.

எப்படியாவது பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற கனவில் இருக்கும் யாமிக்கு அவரது புதிய பாய்பிரண்ட் கைகொடுப்பாரா என்பது பொறுத்துப்பார்த்தால்தான் தெரியும்.  இது குறித்து பாலிவுட் பத்திரிகைகள் கதை கதையாக எழுதுகின்றன. ஆனால் எதையும் காதில் வாங்கும் நிலையில் தற்போது யாமி இல்லையாம்.