Home Tamil Cinema News ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல… இது ஒரு படத்தொட பெயராம்!

ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல… இது ஒரு படத்தொட பெயராம்!

253

yenda-thalaila-ennai-vekkala

தமிழ் திரையுலகில் தற்போது படங்களுக்கு சகட்டு மேனிக்கு விதவிதமாய் பேர் வைப்பதை புதிய டிரெண்டாகி வருகிறது. இதற்கு உதாரணமாய் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தீயா வேலை செய்யணும் குமாரு, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான், யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை என்பன போன்ற தலைப்புகளை கூறலாம்.

அதே போல தற்போது வித்தியாசமான தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. அந்த படத்தின் தலைப்பு ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல’ என்பதாகும்.

இப்படத்தின் நாயகனாக தொலைக்காட்சி தொகுப்பாளர் அஸார் நடிக்கிறார். மிமிக்ரியில் கலக்கிக் கொண்டிருந்த அஸார் ஏற்கனவே தமிழில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த இரண்டில் ஒரு படம் தான், ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல’. இது முழு நீள காமெடிப் படமாம். இந்த படத்தின் கதை கொஞ்சம் சிம்பிள் தான். ஹீரோ ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆனா, படம் முடியும் வரை ஹீரோவுக்கு ஒரு பொண்ணு கூட செட்டாகாதாம். இந்தக்கதயை எங்கோ கேட்ட மாதிரி இருந்தாலும், இது புதுக் கதைதானாம்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்தப் படத்தில் நாயகன் அஸாருக்கு இரண்டு நாயகிகள். ஒருவர் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி, இன்னொருத்தர் ஈடன். இந்தப்படம் மட்டுமில்லாமல் மேலும் ஒரு படத்தில் அஸார் ஹீரோவாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here