இந்திய தேசிய லீக் கட்சிக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பிய ஓய்.ஜி. மகேந்திரன்

இந்திய தேசிய லீக் கட்சிக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பிய ஓய்.ஜி. மகேந்திரன்

98

yg-mahendran

மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ல் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவராவார்.

இந்த னிலையில் சுவாதி கொலை குறித்து நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் இவர் தனது முகநூல் பக்கத்துக்கு வந்த சர்ச்சைக்குரிய ஒரு பதிவை, பிறருக்கு பகிர்ந்திருந்தார். எதிர்ப்பையடுத்து, அவர் விளக்கம் அளித்து முகநூலில் மன்னிப்பும் கேட்டார். இருப்பினும் விமரிசனங்களும், கண்டனங்களும் தொடர்ந்தன. இதனை முன்வைத்து நடிகர் சங்க முற்றுகைப் போராட்டம் நடத்தபோவதாக இந்திய தேசிய லீக் அறிவித்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒய்.ஜி. மகேந்திரன் மன்னிப்பு கேட்டுள்ளதால் முற்றுகைப் போராட்டம் வாபஸ் ஆகியுள்ளதாக இந்திய தேசிய லீக் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் தயாரிப்பாளர் ஆதம் பாவா ஆகியோருக்கு இ-மெயில் மூலம் அனுப்பிய கடிதத்தில், ‘நான் ஏற்கனவே முகநூலில் மன்னிப்பு கேட்டு உள்ளேன்.

மீண்டும் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். நான் எந்த ஒரு மதத்துக்கும் பாராபட்சமாக இருந்தது இல்லை. என்னுடைய நாடகக் குழுவில் சுமார் 10 ஆண்டுகளாக முஸ்லிம்கள் உள்ளனர்.

எனவே நான் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல், மதம் சார்ந்த அமைப்புகளில் இல்லை. நாடகம் மற்றும் சினிமா போன்றவற்றில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகின்றேன். நான் எப்போதுமே இது போன்று செய்தது இல்லை. இந்தமுறை கவனக்குறைவால் நடந்துவிட்டது. அதற்காக முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதுக்காக மன்னிப்பு கோருகின்றேன்.

என்னுடைய இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். ரமலானுக்கு அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள்’ என இந்திய தேசிய லீக் கட்சிக்கு அவர் இ-மெயில் அனுப்பி உள்ளார்.

இந்திய தேசிய லீக் கட்சி இன்று (08-07-2016) மாலை 3-00 மணிக்கு நடத்த இருந்த நடிகர் சங்க முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்படுகின்றது. அதே நேரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன்

மீது கொடுத்த புகாரை இந்திய தேசிய லீக் கட்சி வாபஸ் பெறாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுவாதி கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்ததால் தியாகராயநகர் கிரி சாலையில் உள்ள ஒய்.ஜி.மகேந்திரனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY