சூர்யாவால் தாக்கப்பட்ட வாலிபர் புகாரை திரும்ப பெற்றதன் காரணம் இதுதானா!

சூர்யாவால் தாக்கப்பட்ட வாலிபர் புகாரை திரும்ப பெற்றதன் காரணம் இதுதானா!

179

suriya_premkumar

சென்னையை சேர்ந்தவர் பிரவீண்குமார். இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சக நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்றார்.

அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது, முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று ‘பிரேக்’ போட்டதால், அந்த கார் மீது பிரவீண்குமார் மோதிவிட்டார். அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். இதனால் கார் உரிமையாளரான அந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நடுரோட்டில் அந்த பெண்ணும், பிரவீண்குமாரும் வாக்குவாதம் செய்து கொண்டு இருப்பதை பார்த்த சூர்யா, காரை விட்டு கீழே இறங்கி வந்தார். பிரச்சினை குறித்து கேட்டறிந்த அவர், பிரவீண்குமாரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார்.

இது தொடர்பாக நடுரோட்டில் தன்னை நடிகர் சூர்யா அடித்துவிட்டதாக அந்த இளைஞர் போலீசில் புகார் கொடுத்துவிட்டு, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற்றார். அவர் ஏன் திரும்பப் பெற்றார் என்பதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

தான் யாரையும் அடிக்கவில்லை என்று சூர்யா விளக்கம் அளித்தாலும், தொடர்ந்து சூர்யா அடித்ததாகவும், அதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் அந்த இளைஞர் தொடர்ந்து கூறி வந்தார். இதில் லோக்கல் பிரமுகர்கள் தலையீடு அதிகரித்ததால் போலீசாரும் புகார் மனுவை ஏற்று ரசீது கொடுத்திருந்தனர்.

சூர்யா நேரில் வர வேண்டும். அவர் வரும் வரை விடமாட்டேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார் பிரேம் குமார். இந்த நிலையில் தான் திடீரென நேற்று மாலை புகாரை வாபஸ் பெறுவதாக போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார். இதன் பின்னணியில் ஒரு சமரசப் பேச்சு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இளைஞர் பிரேம் குமாரை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்த சூர்யாவின் தந்தை சிவகுமார், வக்கீல் முன்னிலையில் சமரசப் பேச்சு நடத்தினாராம். அதன் பிறகே பிரேம்குமார் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டாராம்.

 

NO COMMENTS

LEAVE A REPLY