Home Tamil Movie Reviews ஜீரோ – விமர்சனம்

ஜீரோ – விமர்சனம்

460
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

சிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லிய விதம். படத்தின் காட்சியமைப்பு, கற்பனையான பல விஷயங்கள் மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பு, ஆகியவற்றை தான்டிய மிகப்பெரிய பலமாக கருதபடுவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான். அதேபோல் ஒட்டுமொத்த படமும் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.

2.8
இயக்கம்: ஷிவ் மோகா (அருண்குமார்)
ஒளிப்பதிவு: பாபு குமார்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பு: பாலாஜி கபா (மாதவ் மீடியா)
நடிகர்கள்: அஷ்வின் காகுமானு, ஷிவதா நாயர், ஜேடி சக்கரவர்த்தி, ரவி ராகவேந்திரர், துளசி

ஷிவ் மோகா இயக்கத்தில் அஷ்வின் காகுமானு, ஷிவதா நாயர் நடித்து,  வெளிவந்துள்ள படம், “ஜீரோ”. பேன்டஸி மற்றும் திகில் கலந்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

Zero-2015-Tamil-Movie

சினிமாவில் கோஸ்ட் த்ரில்லர், சைகோ திரில்லர், லவ் த்ரில்லர் என பலவகை ஜானர் படங்கள் வந்திருந்தாலும் அதற்கு மத்தியில் ரொமேன்டிக் த்ரில்லர் என டாக் லைனோடு ஒரு வித்தியாசமான கதையை கையாண்டுள்ளது இந்த ஜீரோ திரைப்படம்.

காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள் அஷ்வின், ஷிவதா இருவரும். நாயகனின் தந்தைக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை, காரணம் நாயகியின் அம்மாவிற்கு கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மனநல பாதிப்பும் அதனால் அவர் மரணம் அடைந்ததும், அதேபோல் ஷிவதாவிற்க்கும் மனநலம் பாதிப்பு ஏற்படுமோ என பயம்.

Ashwin-Kakumanu-Sshivada-stills-from-Zero-Tamil-Movie-3

இவரின் ஐயத்திற்கு ஏற்ப நாளடைவில் நாயகிக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது.ஒரு கட்டத்தில் தனக்குள் நடக்கும் மாற்றங்களை ஷிவதாவும் உணர ஆரம்பிக்கிறார். ஆனால் இப்பிரச்சனையால் தனது காதலுக்கு எதுவும் ஆகி, தன் அம்மாவை போல தன் வாழ்க்கை மாறக் கூடாது என இவர் நினைக்க முதல் பாதி நகர்கிறது,

ஆனால் இக்கதைக்கு இரண்டாம் பாதியில் யாரும் எதிர்பாராத அளவிற்கு ஒரு திருப்பத்தை வைத்து கதை வேறு பாதையில் நகர்கிறது. இதில் நாயகிக்கு என்ன ஆகுகிறது அவர்களின் திருமண வாழ்க்கை முறிகிறதா, தொடர்கிறதா என ஓரு சிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷிவ் மோஹா.

அஸ்வின், ஷிவதா இருவருக்கும் தான் நடிப்பதற்கான அதிக இடம் உள்ளது. இருவரும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர், JD சக்கரவர்த்தி ஒரு முக்கியமான பாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.

இவர்களை தவிர படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களது பங்கை குறையில்லாமல் செய்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த படத்தையும் யாரும் எதிர்பாராத விதத்திலும் வித்தியாசமான அணுகுமுறையிலும் கையாண்டுள்ளார் இயக்குனர் ஷிவ் மோஹா.

Zero-Tamil-Film-Stills-5

குறிப்பாக முதல் பாதியில் ஷிவதாவிற்கு ஏற்படும் மாற்றத்தை காட்டும் காட்சி நமக்கே மனநல பாதிப்பு ஏற்பட்டால் இப்படித்தான் இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. பல இடங்களில் நம்மை மிரட்டி சீட்டின் நுனிக்கு இழுத்து செல்கிறது படம். ஆனால் இதற்க்காக இவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் கொஞ்சம் அதிகமோ என யோசிக்க வைக்கிறது. அதேபோல் சில இடங்களில் இருக்கும் இழுவையான காட்சிகள் தேவையற்றவை.

சில கேள்விகளுக்கான பதில் கடைசிவரை தெரியவில்லை. முதல் பாதியில் சுவாரஸ்யமான பல கேள்விகளை எழுப்பி ”அடுத்தது என்ன” என்று யோசிக்க வைத்துவிட்டு பிற்பாதியில் அதற்கான காரணம் தெரிந்தவுடன் படத்தின் சுவாரஸ்யம் சற்று குறைக்கிறது.

Ashwin-Zero-Tamil-Movie-Stills-06

படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் படத்தின் பலம் என்றாலும் தனித்து தெரிவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான் படத்தின் மிகப்பெரிய பலம். பல காட்சிகளை சென்சூரி அடிக்க வைத்ததே இவ்விரண்டு அம்சங்கள்தான்.

சிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லிய விதம். படத்தின் காட்சியமைப்பு, கற்பனையான பல விஷயங்கள் மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பு, ஆகியவற்றை தான்டிய மிகப்பெரிய பலமாக கருதபடுவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான். அதேபோல் ஒட்டுமொத்த படமும் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.

மொத்ததில் “ஜீரோ” – வித்தியாசமான த்ரில்லர்.